science

img

‘ககன்யான்’ சோதனை வெற்றி!

சென்னை, அக்.21- மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன் யான் திட்டத்’தின் முக்கியச் சோதனையான, விண் கலத்திலிருந்து வீரர்கள் பாதுகாப்பாக வெளியேறும் பரிசோதனையை ‘இஸ்ரோ’ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. திட்டமிட்டபடி, விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்  கலம் 17 கி.மீ. உயரத்திற்குச் சென்றதும், வீரர்கள்  அமர்ந்திருந்த பகுதி தனியாக பிரிந்து, பாராசூட் மூல மாக வங்கக் கடலில் இறங்கியது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது. பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு, விண்கலம் மூலம் 2 முதல் 3 விண்வெளி  வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்குப் பிறகு  பூமிக்கு திரும்ப அழைத்து வருவது ககன்யான் திட்டத்  தின் (Gaganyaan Mission) முக்கிய அம்சமாகும். இந்த  திட்டத்தை 2025-ஆண்டு இறுதியில் மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த திட்டத்தின் மிக முக்கிய  நிலையாக கருதப்படும் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் வீரர்களை, பத்திரமாக தரை யிறக்கும் பணி தொடர்பான முதற்கட்ட சோதனையை  சனிக்கிழமை (அக்.21) காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தொடங்க இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.  அதன்படி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து,  சோதனை விண்கலத்தை காலை 8 மணிக்கு விண்  ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயாராக இருந்த நிலை யில், விண்கலம் மேலே எழும்புவதில் சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது.  எனினும், தொழில்நுட்ப சரிபார்த்தலுக்குப் பிறகு மீண்டும் டிவி-டி1 என்ற சோதனை விண்கலத்தை விண்ணில் ஏவும் பணி அடுத்த சில மணி நேரங்க ளிலேயே தொடங்கப்பட்டது.  அப்போது சோதனை விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து, விஞ்ஞானிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. திட்ட இயக்குநர் எஸ். சிவகுமாரை ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோம்நாத், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “டிவி-டி1 திட்டம் வெற்றிகரமாக நிறை வேறியதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறேன்” என அவர் குறிப்பிட்டார். இதையடுத்துப்  பேசிய திட்ட இயக்குநர் எஸ். சிவகுமார், தாங்கள் மேற் கொண்ட தொடர் உழைப்புக்கு இன்று பலன் கிடைத்தி ருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். ககன்யான் திட்டத்தின்படி விண்கலத்தை ஏவும் போது, லோ ஆல்டிட்யூட் மோட்டார், ஹை ஆல்டிட்யூட் மோட்டார் மற்றும் அவசரகாலத்தில் வாகனத்தில் இருந்து விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஜெட்டி சனிங் மோட்டார் ஆகியவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகவும், அவற்றின் பணிகள்  திட்டமிட்டபடி இருந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்துள் ளது. இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தரவுகள், ககன்  யான் திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்த உதவும் எனவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.