science

img

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணையான ஸ்மார்ட் சோதனை வெற்றி

டார்பிடோவை ஏவ உதவும் சூப்பர்சானிக் ஏவுகணை (ஸ்மார்ட்) ஒடிசா கடலையொட்டிய வீலர் தீவில் இன்று முற்பகல் 11.45-மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேகக் குறைப்பு மெக்கானிசத்தை நிலை நிறுத்துதல், டார்பிடோவை வெளித்தள்ளுதல், மூக்கு கூம்பு பிரிதல் உள்ளிட்ட அனைத்து இயக்க நோக்கங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

கடற்பகுதியை ஒட்டி உள்ள கண்காணிப்பு நிலையங்கள் (ரேடார்கள், ஆப்டிக்கல் சிஸ்டம்கள்) மற்றும் கீழ்நிலை கப்பல்கள் உள்ளிட்ட டெலிமெட்ரி நிலையங்கள் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்தன. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் செயல்பாடுகளுக்கான குறைந்த எடை கொண்ட நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோ முறையை டார்பிடோவின் இலக்கைத் தாண்டியும் ஏவ உதவும் ஏவுகணை ஸ்மார்ட் ஆகும். நீழ்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை நிறுவுவதில் இந்த ஏவுகணை சோதனையும், செயல்விளக்கமும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது.

ஸ்மார்ட் ஏவுகணைக்குத் தேவையான தொழில்நுட்பங்களை விசாகபட்டிணத்தில் உள்ள எஸ்டிஎல், ஆக்ராவில் உள்ள ஏடிஆர்டிஇ, ஐதராபாத்தில் உள்ள ஆர்சிஐ மற்றும் டிஆர்டிஎல் உள்ளிட்ட ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் ஆய்வகங்களும் முன்னெடுத்தன. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;