science

img

அணுக்கழிவு மையத்தால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: நிர்வாகம் விளக்கம்

கூடங்குளம்,ஜூன் 14 கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமையவுள்ள நிலையில், அணுக் கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என அணுமின் உலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அணு மின் உலை நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு உலை 1 மற்றும் 2 ல் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே இங்கு அமையவுள்ள அணுக் கழிவு மையத்தில் சேமிக்கப்படும் எனவும், மற்ற அணு உலை கழிவுகள் இங்கு கொண்டு வரப்படாது எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. சேமிக்கப்படும் அணுக் கழிவுகள் எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அணு கழிவுகளிலிருந்து கதிர்வீச்சு அபாயம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் அமைய வுள்ளதுபோலவே இந்தியாவில் மேலும் இரண்டு இடங்களில் அணுக் கழிவு மையம் அமைய வுள்ளதாகவும் அணு கழிவு மையத்தால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலம், நீர் ஆகியன மாசுபடாது எனவும் விளக்கப்பட்டுள்ளது. அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அதன் வழிகாட்டுதலின் அடிப்படை யில்தான் அணுக் கழிவு மையம் அமைவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

;