science

img

14 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்

பிஎஸ்எல்வி சி -14 ராக்கெட் 14 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இத்துடன்  அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்  இன்று 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 
பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் எக்ஸ்.எல். வகையில் 21-வது ராக்கெட் ஆகும். சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் ஏவப்படும் 75-வது ராக்கெட் என்ற பெருமையை பெறுகிறது. 1625கிலோ எடை கொண்ட இந்த 3ம் தலைமுறை கார்டோசாட் செயற்கைகோள் பூமியிலிருந்து   509 கிலோ மீட்டர் உயர சுற்றுவட்ட பாதையில் 97.5 கோணத்தில் நிறுத்தப்பட உள்ளது. இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள் பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் துல்லியமாக படம் பிடித்து அனுப்பும் திறன் கொண்டது. ராணுவ நிலைகளையும், பதுங்கு குழிகளையும், தீவிரவாதிகளின் மறைவிடங்களையும் மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 

;