science

img

ஒரு டீ-பேக்கில் 11 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் உள்ளன- ஆய்வு தகவல்

ஒரு டீ-பேக்கில் இருந்து சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் வெளியேறுகிறதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவின் மேக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) பேராசிரியையாக இருக்கும் நதாலி துபெங்ஜ் என்பவர், டீ-பேக்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் துகள்கள் தேநீரில் கலந்துள்ளதா என்பதை குறித்த ஆய்வு மேற்கொண்டார். இதற்கென, தனது ஆராய்ச்சி மாணவர்களோடு இணைந்து மாண்ட்ரீல் பகுதியில், உள்ள கடைகளிலிருந்து வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த டீ- பேக் பாக்கெட்டுகளை வாங்கி ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், 95 டிகிரி செல்சியஸ் தண்ணீரில், டீ-பேக்களை வைத்து எலெக்ட்ரான் மைக்ரோ ஸ்கோப் மூலம் பரிசோதித்தபோது, ஒரு டீ-பேக்கில், 100 நானோ மீட்டரில் இருந்து 5 மில்லி மீட்டர் அளவில், சுமார் 11.6 பில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  
 

;