science

img

கட்டுப்படாத பாக்டீரியாக்ளுக்கான புதிய எமன்

வீட்டைச் சூழ்ந்திருக்கும் சுவரைப் போன்ற  அமைப்பை சில உயிரிகள் கொண்டுள்ளன.  செங்கல், ஹலோப் ரிக்ஸ் போலவே அவை களின் மூலக்கூறு அமைப்பிலும் பல்வேறு வேறுபாடு கள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக தாவர செல்லின் சுவர் செல்லுலோஸ் என்கிற சர்க்கரை  மூலக்கூறுகளாலும், பூஞ்சை-கைட்டின் போன்ற வற்றாலும்  ஆனது. விலங்கு செல்களில் இத்த கைய செல்சுவர் காணப்படுவது இல்லை.  பாக்டீரியாக்களின்(தமிழ் அடமென்ட்டுகள் இதனைக்  குச்சிலங்கள் என்கிறார்கள்) செல்சுவர் பெப்டிடோ கிளைக்கன்களால் ஆனது. பெருகிவரும் மருந்துகள் பாக்டீரி யாக்களைக் கொள்வதற்காண வீரியத்தை இழந்துள்ளது, சர்வதேச அளவில் மாபெரும் பிரச்சனையாக சமீப கால மாக உருவெடுத்துள்ளது.  இதற்குத் தலையாய காரணம்.. சளி, காய்ச்சல், இருமல்  போன்றவற்றிற்கு .. மெடிக்கல் ஊழியரை நம் மக்கள் மருத்துவ ராக நினைத்து மருந்துகளை குத்து மதிப்பாக வாங்கி வந்து  விழுங்குதலேயாகும். இப்படி எந்தவொரு நுண்ணுயிரெதிரி யிக்கும் கட்டுபடாத பாக்டீரியாக்களுக்காகவே மெக்  மாஸ்டரைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வா ளர் பெத் கல்ப் மற்றும் பேராசிரியர் கெர்ரி ரைட்  ஆகியோர் கார்போமைசினைக் கண்டு பிடித்துள்ளனர்.  மற்ற மருந்துகள் செல்சுவரை உடைக்கும்  பணியைச்  செய்பன. ஆனால் கிளைக்கோ பெப்டைடு  குழுமத்தைச் சேர்ந்த கார்போமைசின் முன்பு  குறிப்பிட செல்சுவர் மேற்கொண்டு உற்பத்தியாவதைத்  தடுக்கிறது. இதனால் நோயைப் பரப்பும் பாக்டீரியாக்க ளின் பெருக்கம் மட்டுப்படுத்தப்பட்டு நோய் உண்டா வது தடுக்கப்படுகிறது. இதனை மருந்துகளுக்கு கட்டுப்படாத  Staphylococcus aureus என்கிற பாக்டீரியாவைக் கொண்டு  எலிகளில் சோதித்துக் கண்டடைந்ததை நேச்சர் இதழில்  12.02.2020 அன்று வெளியிட்டுள்ளனர். இனிமேல் சகல வலிமை  பெற்ற நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் ஜாக்கிரதையாக இருக்கக் கடவன.  Reference: Nature

;