நிலவின் தென்துருவத்தின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவின் தென்பகுதியில் ஆக்சிஜன், கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை தனிமங்கள். ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தேடி வருகிறது.
இந்நிலையில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவி கண்டறிந்துள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள RAMBHA-LP என்ற கருவி நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா உள்ளதை அளவிட்டுள்ளது.
ஒரு கன மீட்டருக்குத் தோராயமாக 5 முதல் 30 மில்லியன் வரையில் எலக்ட்ரான்கள் உள்ளது. பிளாஸ்மா சூழலை முதன் முதலில் அளவீடு லேண்டர் செய்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நிலவிலிருந்து பூமிக்குத் தொலைத் தொடர்பு கதிர்களை அனுப்பும் போது ஏற்படும் இரைச்சலைத் தவிர்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.