science

img

தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம்: நிலம் வழங்க முதல்வர் ஒப்புதல்

மதுரை, செப்.29- தூத்துக்குடியிலே இஸ்ரோ ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்பு தல் அளித்துள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் மதுரையில் ஞாயிறன்று கூறி னார்.  மதுரை விரகனூரில் உள்ள தனி யார் பொறியியல் கல்லூர் ஒன்றில் 12-ஆம் வகுப்பு தேர்வு எமுதும் மாணவர்களுக்கான திறன் மேம் பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி யை தொடங்கிவைத்து பேசிய அமைச்சர், மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்வது, வேலை வாய்ப்பு பெறுவது, அவர்கள் திறனை மேம்படுத்திக்கொள்வது தொடர்பாக பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. மன தைரியம், தன்னம்பிக்கை யோடு மாணவர்கள் தேர்வை எதிர் கொள்ளவேண்டும். தமிழக அரசும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தூத்துக்குடியில் இஸ்ரோ ஏவு தளம் அமைப்பதற்கு முதல்வர் நிலம் வழங்கி ஒப்புதல் அளித்துள் ளார். அதற்கான நடவடிக்கைகளை யும் முதல்வர் மேற்கொண்டு வரு கிறார் என்றார்.

நாட்டின் அனைத்து செயற்கைக் கோள்களும் தற்போது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் இரு ராக்கெட் ஏவுதளங்களில் இருந்தே விண்ணில் செலுத்தப்படுகின்றன. மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நீண்டகால கோரி க்கை. இதற்காக பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய சில ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோ வின் விண்வெளித் துறைப் பேராசி ரியர் நாராயணா தலைமையில் விஞ்ஞானிகள் அண்ணாமலை, அபேகுமார், கனங்கோ, சுதிர் குமார், சேஷகிரி ராவ், சோமநாத் ஆகிய ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் புவியி யல், பாதுகாப்பு, மற்றும் பொருளா தார ரீதியாக  சிறந்த இடம் தூத் துக்குடி மாவட்டத்தில் உள்ள குல சேகரப்பட்டினம்தான் எனத் தெரி வித்ததாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம்  பூமத்திய ரேகை யிலிருந்து  குலசேகரப்பட்டினம் எட்டு டிகிரியில் உள்ளதாம்.

மூன்றாவது ஏவுதளம் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 20 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

;