விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்' திட்டத்தில், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணில் அனுப்பி சோதனை செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்க உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், சந்திரயான் 3, ஆதித்யா-எல்1 ஆகிய திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணில் அனுப்பி சோதனை செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்க உள்ளது. விண்வெளி பயணத்தின்போது விஞ்ஞானிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டுவரும் TV-D1 வாகனத்தின் சோதனையை தொடங்க உள்ளது.