சூரியனை விட 70 மடங்கு பெரிய கருந்துளை ஒன்றை சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் தேசிய வானிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், லமோஸ்ட் என்ற தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்ததில், ஈர்ப்பு விசை மூலம் கண்ணுக்கு தெரியாத ஒரு பொருளை மையமாக வைத்து பல நட்சத்திரங்கள் சுற்றிக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். பால்வெளி மண்டலத்தில் இதுவரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருத்துளைகள் சூரியனை விட 20 மடங்குதான் பெரிதானவை என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, 70 மடங்கு பெரிய கருந்துளை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருந்துளை பூமியில் இருந்து 15 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளாது. இந்த பெரிய கருந்துளைக்கு, எல்பி-1 (LB-1) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை சீன அறிவியல் அகாடமி, ஜெர்னல் நேச்சர் என்ற ஆய்வு இதழில் வெளியிட்டுள்ளது.