science

img

சந்திரயான் 2 : நிலவை நோக்கி செல்லும் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு!

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரில் இருந்து நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மதியம் 1.15 மணிக்கு வெற்றிகரமாக  பிரிக்கப்பட்டது. தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அதன் நீள்வட்ட சுற்றுப்பாதை இன்று காலை 8.50 மணிக்கு முதல் முறையாக குறைக்கப்பட்டது. இதற்காக 4 வினாடிகள் அதன் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது, லேண்டர் நிலவின் நீள்வட்டப்பாதையில் குறைந்தபட்சமாக 104 கிமீ தொலைவிலும், அதிகபட்சமாக 128 கிமீ தொலைவிலும் சுற்றத் தொடங்கியது. ஆர்பிட்டரின் அதன் சுற்றுப் பாதை மாற்றப்படவில்லை. இந்நிலையில், லேண்டரும் ஆர்பிட்டரும் நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இதை அடுத்து, மீண்டும் நாளை அதிகாலை 3.30 மணி முதல் 4.30 மணிக்குள், லேண்டரின் சுற்றுவட்டப்பாதை மேலும் குறைக்கப்படும். இதன்மூலம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் லேண்டர் வந்து விடும். இதைத் தொடர்ந்து, வரும் 7-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.30 மணியளவில் லேண்டர் விக்ரம், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்படும். பின்னர், லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய உள்ளது.

;