science

img

மேம்படுத்திய லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்து புதிய சாதனை

வேதியியலுக்கான  நோபல் பரிசு 

ஸ்டாக்ஹோம்,அக்.9- மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்து புதிய சாதனை  படைத்த 3  விஞ்ஞானிகளுக்கு வேதியியலு க்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில்  புதனன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 2019 ஆம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற தேர்வானவர்களின் விவர ங்களை தேர்வுக் குழுவினர் வெளியிட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் ஜான் பி.குடெனாப், ஸ்டான்லி விட்டிங்காம், ஜப்பானைச் சேர்ந்த அகிரோ யோஷினோ ஆகியோருக்கு வேதி யியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

லித்தியம் அயன் பேட்டரிகள் மொபைல் போன்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் மின்சார வாகனங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.  மீண்டும் சார்ஜ்செய்யும் வசதி கொண்ட லித்தியம் அயன்பேட்டரி தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டு, மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியைக் கண்டுபிடித்த 3 பேருக்கு வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்த ளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.