►ஸ்டெம் செல் ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
முதிர்ச்சியடைந்த மனித செல்களை கருநிலை செல்களாக மாற்றும் ஆய்வு ஐபிஎஸ் (IPS – INDUCED PULRIPOTENT STEM) என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நமது உடலில் எந்தவகை செல்களாகவும் அவற்றை மாற்றி பல நோய்களைக் குணப்படுத்த முடியும். இதுவரை செய்யப்பட ஆய்வுகள் விழி லென்சை சீர்படுத்துவது, இதய நோய்கள், விழித்திரை சிதைவு மற்றும் பார்கின்சன் நோய் ஆகியவற்றிற்கு பயன்படும் என தெரிய வந்துள்ளது.
►கசப்பாகும் இனிப்பு
செயற்கை இனிப்பான்கள் (artificialsweetner) உட்கொள்வது இதய நோய்களை அதிகப்படுத்தலாம் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவிலுள்ள செயற்கை இனிப்பான் களை ஆய்வு செய்ததில் அதிலுள்ள அஸ்பார்டம் (aspartame) நரம்பு-இரத்த சிக்கல்களுடன் தொடர்பு உள்ளது; அதிலுள்ள மற்றொரு வேதிப்பொருள் அகேசுபிளேம் பொட்டாசியம் (acesulfame potassium) இதய நோய்ளுடன் தொடர்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.
►பிளாஸ்டிக்கும் உடல் பருமனும்
நாம் அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களிலுள்ள ‘ஒபீசோஜென்ஸ்’ (obeso gens’) என்கிற வேதிப்பொருட் கள் உடல் பருமனை ஏற்ப டுத்தலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். மனித உடலின் இயல்பான வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு களை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமான கொழுப்பு தசைகள் உண்டா வதை அதிகப்படுத்துமாம். பிளாஸ்டிக் பொதிகள், துணிமணிகள், அறைகலன் கள், அழகு சாதனப் பொருட்கள், உணவுப்பண்டங்களில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி ஆகியவற்றில் இந்த வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
►கரப்பான் ரோபோ அபாயகரமான பகுதிகளை சோதனையிடவும் சுற்றுசூழலை கண்காணிக்கவும் ‘சைபராக்’ (cyborg) எனும் கரப்பான் பூச்சியை ஜப்பான் அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். இது ரோபோவும் பூச்சியும் இணைந்த ஒரு கலப்பு ஜீவி. தொலை கண்காணிப்பால் (remote) இயக்கப்படுகிறது. இந்த பூச்சியின் இயக்கத்தை தடை செய்யாத மிகுமென் சூரியகலன் கொண்டு அதன் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. பூச்சியின் நரம்புமண்டலத்துடன் இந்த சிஸ்டம் இணைக்கப்பட்டு ஒரு பொத்தானை அழுத்தி மின்அதிர்வு ஏற்படுத்தப்படு கிறது. இந்த அதிர்வு நாம் விரும்பும் திசையில் பூச்சியை செலுத்துகிறது.
►குங்குமப்பூவே
குங்குமப்பூ பூமிக்கடியில் தண்டுகள் மூலம் பரவுகிறது. இதன் பூவிலுள்ள மகரந்தங்கள் முதிர்ந்தவுடன் சேகரிக்கப்படுகின்றன. பின் உலரவைத்து வணிகப் பயன்பாட்டிற்கு வருகிறது. இது ஒரு மணமூட்டி மட்டுமல்ல;மருந்தாகவும் பயன்படும் பொருளாகும்.இந்திய தொன்மை மருத்துவ ஏடுகள் அது நரம்பு நோய்களுக்கு மருந்து என்று கூறுகிறது. அண்மைக்கால மருத்துவ சோதனைகள் தினமும் 30மி.கி அளவு உட்கொண்டால் மன அழுத்தத்திற்கு நிவாரணமாக விளங்கும் என்று காட்டுகின்றன.அதிலுள்ள சில வேதிப்பொருட்கள் புற்று நோய் எதிர்ப்பு சக்தி கொண்டன.கிரேக்க நாட்டிலிருந்து பரவிய இந்த தாவரம் மத்திய தரைக்கடல் தட்பவெப்ப சூழலில் நன்கு வளரக்கூடியது.உலகில் உற்பத்தியாகும் குங்குமப் பூவில் 90% ஈரானில் விளைகிறது.இந்தியா 5% உற்பத்தி செய்கிறது. மதிப்பு மிக்க குங்குமப் பூ காஷ்மீரில் விளைகிறது. அங்குள்ள ஈரம் வடியக்கூடிய நிலம், பூ மலரக்கூடிய காலமான கோடையில் 25டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் வளமான மண் ஆகியவை காரணமாக குங்குமப் பூ விளைய உகந்ததாக உள்ளது. இப்போது இது போன்ற சூழல் எங்கெங்கு உள்ளது என்பதை கணினி அல்கோரிதம் போன்ற தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டுள்ளது. இமாலயன் உயிர்வள தொழில்நுட்பக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மாதிரிப்படுத்துதல் என்கிற முறையில் இது விளையக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்துள்ளனர். இது விளையும் ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய பகுதிகள் உலகில் குங்குமப் பூ விளையும் மற்ற பகுதிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளது.சூரிய கதிர்வீச்சு, காற்றின் வேகம், நில மட்டங்கள் போன்ற 103 காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் அது விளைவிக்க ஏற்ற பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர்,இமாச்சல் பிரதேசம்,வட சிக்கிம், மணிப்பூரிலுள்ள இம்பால், தமிழ்நாட்டிலுள்ள உதகமண்டலம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கும். இந்தப் பகுதிகளில் இரண்டு பருவங்களில் நடத்தப்பட்ட சோதனை பயிரிடுதலில் நாட்டின் தேசிய விளைச்சலான ஏக்கருக்கு 2.6கி கி அளவிற்கு இங்கும் விளைந்துள்ளன. பொருளாதார ரீதியாகப் பார்த்தால் இந்தப் பகுதிகளில் அவை தொடர்ந்து பயிரிடப்பட வேண்டும். (18.09.22 தேதியிட்ட இந்து ஆங்கில நாளிதழ் டி.பாலசுப்ரமணியன் கட்டுரையிலிருந்து)
►பாதுகாப்பான ஸ்டெதாஸ்கோப்
தொடக்க நிலை நிறுவனம் ஒன்றின் உதவி யுடன் இரு பெரிய மருத்துவ மனைகளில் ‘புளூ டூத்’ தொழில்நுட்பம் கொண்ட ஸ்டெதாஸ் கோப்பை(stethoscope) மும்பை பெருநகர மன்றம்(BMC) அறிமுகப்படுத்தியுள்ளது. ’ஆயுசின்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எண்ணியல் கருவி மூலம் நேரடி தொடர்பு இல்லாமல் மார்பு துடிப்பை அறிந்துகொள்ள லாம். தொற்று நோய் உள்ளவர்களிடமிருந்து மருத்துவர்கள் பாதுகாப்பான தொலைவில் இருக்க இது உதவும் என்கிறார் மருத்துவ மனைகளின் இயக்குனர் நீலம் ஆண்டிரடே.