சிறந்த விஞ்ஞானிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் ராஷ்ட்ரிய விஞ்ஞான் குழு விருதினை அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக சந்திராயன் - 3 குழுவின் திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
சந்திராயன் - 3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதன் மூலம் கீழ் நிலவின் தென் துருவத்தில் இந்தியா முதல் நாடாக விக்ரம் லேண்டரை இறக்கி சாதனை படைத்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது