science

img

வானில் 2 நிலவுகள் தோன்றும்! - விஞ்ஞானிகள் தகவல்

நாளை முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை வானில் 2 நிலவுகள் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
'2024 PT5' என்ற சிறிய விண்கல் பூமிக்கு சுமார் 14 லட்சம் கி.மீ தொலைவில் வரவுள்ள நிலையில், செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை வானில் 2 நிலவுகள் தோன்றும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  '2024 PT5' விண்கல் மீது சூரிய ஒளிப்படும்போது, நிலவு போல் காட்சியளிக்கும். நிலவைவிட 1,73,700 மடங்கு சிறியது என்பதால்  இதனை 'மினி மூன்' என்று அழைக்கப்படுகிறது. இந்த '2024 PT5' விண்கல் தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.