அது 1979 ஆம் ஆண்டு, 300 மில்லியனுக்கும் அதிக மான மக்கள் வெறும் வயிற்றோடு படுக்கைக்குச் சென்ற ஒரு நாடு. இன்னும் சொல்லப் போனால் அதிக மான மக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்த தருணம். ஆனால், லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வல்லுநர்கள் குழு துணிச்சலான முடிவை எடுத்தது. விண்வெளி ஆராய்ச்சிக்கு யாருடைய உதவியும் இல்லாமல் எஸ்எல்வி-3 என்ற ஒரு ஏவுகணையை (ராக்கெட்) சோதனை முறையில் விண்ணில் ஏவியது இந்திய விண் வெளி ஆராய்ச்சி அமைப்பு. அன்றைக்கு, சோவியத் விண்வெளி திட்டம் (இப்போது ரஷ்யாவின் கூட்டாட்சி விண்வெளி நிறுவனம் - ரோஸ் கோஸ் மோஸ்), அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) போன்ற உலகின் ஜாம்பவான் களால் மட்டுமே இந்த இலக்கு அடையப்பட்டது. ‘ரோகிணி’ சேர்க்கைகளை சுமந்து சென்ற எஸ்எல்வி-3 ராக்கெட், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) முதல் முயற்சியாகும். இது சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அன்றைக்கு தோல்வி யில் முடிந்தது. இருப்பினும் துவண்டு விடவில்லை. தனது முயற்சிகளை தொடர்ந்தது; தவறுகளை சரி செய்தது. 1980 ஆம் ஆண்டு 35 கிலோ எடை கொண்ட ‘ரோகிணி-1’ சேர்க்கைகளை சுமந்து சென்ற எஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக பயணித்தது. மேலும் இது தனது சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்தச் சாதனை யின் மூலம் சொந்தமாக ராக்கெட், செயற்கைக்கோள் ஆகிய வற்றை உருவாக்கி, அவற்றை கண்காணிக்கும் அமைப்பு களையும் ஏற்படுத்திய 6 ஆவது நாடாக இந்தியா உருவெ டுத்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிடம் மட்டுமே அந்தத் தொழில்நுட்பம் அப்போது இருந்தது. விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பி யது. இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பின்னால், மன உறுதி யும் துணிச்சலும் உள்ளது.
செஞ்சுரி அடித்த அறிவியலாளர்கள்!
அடுத்த 46 ஆண்டுகளில் 99 ராக்கெட்டுகளை வெற்றிகர மாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ, மாபெரும் சாதனை யாக 100 ஆவது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளது. சென்னை அருகே ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ‘என்விஎஸ்-02’ என்ற செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எப் 15 ராக்கெட் மூலம் 2025 ஜனவரி 29 அன்று காலை சரியாக 6:23 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது. இந்தியாவின் விண்வெளி அமைப்பு செயல்பட, கேரளாவின் தும்பாவில் ஒரு தேவாலயத்தில் முதன் முதலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கிருந்து துவங்கிய பயணத்திற்கு, உலகின் உயர்ந்த தொழில் நுட்பமான ரஷ்யாவின் கிரையோ ஜெனிக் இயந்திர தொழில்நுட்பம் நமது அறிவியலாளர்களுக்கு பெரும் தூணாக அமைந்தது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல்வேறு வகையிலும் குடைச்சல் கொடுத்து வந்தது. கனமான செயற்கைக்கோள் களை ஜியோ சின் க்ரோனஸ் டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (ஜிடிஒ) செலுத்தும் திறனையும் முடக்கியது. இத னால் நமது முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டது. அதன்பிறகு, சென்னையில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் 43,360 ஏக்கர் பரப்ப ளவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் ஏவு தளம் அமைப்பது என்று முடிவு செய்யப் பட்டது. இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம், பூமத்திய ரே கைக்கு அருகாமை யில் அமைந்திருக் கிறது. ஸ்ரீஹரி கோட்டா வைப் போன்று, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஆய்வு மையம், பிரெஞ்ச் கயானாவில் உள்ள குரோவ் விண்வெளி நிலையம் ஆகியவையும் பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ளன. 1979 மற்றும் 2000 ஆண்டுக்கு இடையில் 13 பயணங்கள் மட்டுமே வெற்றியுடன் தொடங்கின. அதன் பிறகு, இஸ்ரோ நிறுவனம் மற்றும் நமது அறிவியலாளர்களை வழி நடத்திய நிபுணர்களின் நம்பிக்கை, கடின உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் ஏவுதல் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் 100 சதவீதம் வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் விண்ணில் செலுத் திய 9 ராக்கெட் பயணங்களும் சிறப்பான வெற்றியாகும். புதிய புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களால், நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து உலக நாடுகளுக்கு சவால் விடும் நிறுவனமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மாறி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், வளர்ந்த நாடுகளுக்கும் கூட செயற்கை கோள்களை ஏவும் இஸ்ரோவின் நம்பகத் தன்மையாகும். 1999 முதல் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை 433 செயற்கைக்கோள்களை இஸ்ரோ நிறுவனம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. அவற்றில் பெரும்பாலா னவற்றை, இந்திய தயாரிப்பான துருவ சேர்க்கை ஏவுதல் (பிஎஸ்எல்வி) ராக்கெட் சுமந்து சென்றுள்ளது. குறிப்பாக, 1750 கிலோ வரை சூரிய ஒத்திசைவால் சுற்றுப் பாதையில் சுமந்து சென்றது சிறந்த படைப்பாகும்.
கொடி கட்டி பறக்கும் இந்தியா!
நமது நாட்டில் தரைவழி, கடல் வழி, வான்வழி போக்குவரத்து பயன்பாடும், அதன் பாதுகாப்பும் மிக மிக முக்கியமான தாகும். இதற்கு உதவி செய்யும் வகையில், இந்திய மண்டல வழிகாட்டு செயற் கைக்கோள் அமைப்பை உருவாக்க திட்டமிட்டது இஸ்ரோ. அதன்படி, 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், 8 வழிகாட்டு செயல் முறை செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ நிறுவனம், அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. இதன் மூலம் இந்தியா வுக்கு என்று பிரத்யேக வழிகாட்டி நாவிக் தொழில்நுட்பத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.
நம்பிக்கையான எதிர்காலம்!
1975 ஆம் ஆண்டு இந்தியா, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை சோவியத் யூனியன் உதவியுடன் விண்ணில் ஏவியது. அதன் பிறகு பல்வேறு செயற்கை கோள்கள், ஏவுகணைகள் என்று விண்வெளி துறையில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சோதனைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது. அவற்றில் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் சந்திரயான், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் மங்கள்யான், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா- எல்1 உள்ளிட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இந்தியா வெற்றிகரமாக பயணத்தை தொடங்கி உள்ளதால் உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் திருப்பி உள்ளது. மொத்தமாக, கடந்த 45 ஆண்டுகளில் மூன்று நானோ செயற்கைக் கோள்கள், ஒரு மைக்ரோ சாட்டிலைட், தனியார் நிறுவனங்கள் மற்றும் மாணவர்களால் தயாரிக் கப்பட்ட 18 செயற்கைக் கோள்களையும் விண்ணில் வெற்றி கரமாக செலுத்தி இருக்கிறது. அந்த வரிசையில், ‘இந்தியன் என்விஎஸ்-02’ செயற்கை கோள், மற்ற செயற்கைக்கோளுடன் இணைந்து சுற்று வட்டப் பாதையில் பயணிக்கும் வகையில், விண்ணில் செலுத்தி உள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோள் தரை, கடல் மேலாண்மை, மொபைல் சாதனங்களை கொண்டு இருப்பிட அடிப்படையிலான சேவைகள், வான்வழிப் போக்குவரத்து கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் துல்லி யமாக தகவல் பெற முடியும் என்று இஸ்ரோ அறிவிய லாளர்கள் உறுதிபட தெரிவித்திருப்பது மற்றொரு சாத னையாகும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கும் இஸ்ரோ, கடந்த 46 ஆண்டுகளில் 548 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. அவற்றில் 438 செயற்கைக்கோள் வெளிநாடுகளுக்குச் சொந்தமானது. மேலும் 6 தலைமுறை ராக்கெட்டுகளையும் இதுவரை இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி இருப்பது புதிய சாதனையாகும்.
நாட் அவுட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 46 ஆண்டுகளில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நான்கு முறை எஸ்எல்வி-3, நான்கு முறை ஏஎஸ்எல்வி, 62 முறை பிஎஸ்எல்வி, 16 முறை ஜிஎஸ்எல்வி, 7 முறை எல்எம்வி-3, மூன்று முறை எஸ்எஸ்எல்வி உள்பட 99 முறை ஏவி யுள்ளது. இதில், 85 வெற்றிகரமாக விண்ணில் சிறிப்பாய்ந்து உள்ளன. ஐந்து ஏவுகணைகள் அதன் நோக்கத்தில் பாதி யளவு வெற்றி அடைந்தன. மீதமுள்ள 10 ஏவுகணைகள் மட்டுமே தோல்வியடைந்தன. இந்தப் பின்னணியில் தான், நூறாவது ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, அதனை நிலை நிறுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது.
சி.ஸ்ரீராமுலு