science

img

நிலவின் இயற்கை அதிர்வு விக்ரம் லேண்டர் பதிவு

நிலவின் மேற்பரப்பில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை விக்ரம் லேண்டர் பதிவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை வெற்றிகரமாக ஆய்வு செய்து வருகின்றன. ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று அங்குள்ள கனிம வளங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

விக்ரம் லேண்டர் மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்மா இருப்பதும் கணிக்கப்பட்டுள்ளது. நிலவில் விக்ரம் லேண்டர் ஆய்வு செய்யும்போது திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

சந்திரயான் - 3 விக்ரம் லேண்டரில், நிலவின் அதிர்வுகளை ஆய்வு செய்யும் வகையில் இன்ஸ்ட்ரூமண்ட் ஃப்பார் லூனார் செஸ்மிக் ஆக்ட்டிவிட்டி (ILSA) எனும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இது மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் தொழில்நுட்பத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மைக்ரோ எலக்ட்ரோ மெக்கானிக்கல் சிஸ்டம்ஸ் என்ற தொழில்நுட்ப கருவி, பிரக்யான் ரோவர் மற்றும் பிற கருவிகளின் இயக்கங்களின் காரணமாக ஏற்படும் அதிர்வுகளைப் பதிவு செய்துள்ளது.

நிலவில் ஏற்பட்ட இந்த அதிர்வு பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது போல நிலவிலும் ஏற்படுகிறதா என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.