science

img

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைவு - இஸ்ரோ

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ கூறியதாவது, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பிய விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரை கட்டுப்பாடு தொடர்பை இழந்தது. இதனை தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான நாசாவுடன் இணைந்த அனைத்து முயற்சியும் தோல்வியிலே முடிந்தது என்றனர்.மேலும் நிலவில் இன்னும் 5 நாட்கள் மட்டுமே பகல் பொழுது காணப்படும் என்பதால், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது என கூறியுள்ளனர்.