திருவனந்தபுரம்:
இஸ்ரோவில் ஆட்சேர்ப்புக்கு ஒன்றிய அரசு முழு தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, விஞ்ஞானிகள் / பொறியாளர் கள் மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்களை நியமிக்கக் கூடாதுஎன்று ஒன்றிய விண்வெளித் துறைகடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
துறையின் இணைச் செயலாளர் சந்தியாவேணுகோபால் சர்மா இந்தஉத்தரவை பிறப்பித்துள்ளார். ஓய்வு பெற்றோர் காலியிடங்களை தெரிவிக்கக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுஉலகின் முன்னணி விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வை தனியார்மயமாக்கும் நட வடிக்கையின் ஒரு பகுதியாகும்.இதன்மூலம் இஸ்ரோவின் மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியத்தின் (ICRB) அனைத்து ஆட்சேர்ப்பு நடைமுறைகளும் நிறுத்தப்படும். இஸ்ரோ திட்டங்களில் கட்டுமான மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கான நியமனங்களும் தடைபடும். அலுவலக ஊழியர்களின் நியமனமும் இருக்காது. ஐஐஎஸ்டி,ஐஐடியிலிருந்து கேம்பஸ்ஆட்சேர்ப்பும் தடுக்கப்பட்டுள் ளது. மையங்களுக்கான நேரடி ஒப்பந்த நியமனங்களும் இருக்கக்கூடாது.
ஆட்சேர்ப்பு மீதான தடைவிண்வெளி துறை சீர்திருத்தத் தின் ஒரு பகுதியாகும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பெருமைக்குரிய இஸ்ரோ சீர்திருத்த நடவடிக்கை,பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவுக்குப் பிறகு வருகிறது. ஒன்பது தலைமையகங்கள் உட்பட நாடு முழுவதும் இஸ்ரோ 44 நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் உள்ள விஎஸ்எஸ்சி உட்பட நான்கு நிறுவனங்கள் அடங்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட சுமார் பதினெட்டாயிரம் பேர் இங்கு பணியாற்று கின்றனர். மேலும், பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் 20,000 க்கும் மேற்பட் டோர் உள்ளனர்.சந்திரயான் மற்றும் மங்கள்யான் வெற்றிகள் உட்பட பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதல்களைச் செய்துள்ள தன்னிறைவு பெற்ற இஸ்ரோவில் ஒன்றிய அரசின் சீர்திருத்தங்கள் குறித்து ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். ‘தானாக விலகுதல்’ நடக்கும். பதவி உயர்வு தடைபடும் எனவும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர். 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான அந்நியசெலாவணியை சம்பாதித்துள் ளது. எதிர்காலத் திட்டங்களில் ககன்யான் உட்பட மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களும் அடங்கும். வேலை நியமனத்தை தடை செய்யும் ஒன்றிய அரசின் முடிவு இவை அனைத்தையும் பாதிக்கும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.