science

img

சந்திரயான்-3 லேண்டரின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா!

நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலிருந்து நாசாவின் லூனார் ஆர்பிட்டர், சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. பின்னர் கடந்த 4-ஆம் தேதி ரோவர் மற்றும் லேண்டர் உறக்க நிலைக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், நிலவின் தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலிருந்து நாசாவின் லூனார் ஆர்பிட்டர், சந்திரயான்-3 லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. நாசா, பிரக்யான் லேண்டரின் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.