பெங்களூரு:
மோடி அரசு பதவியேற்ற பின் தனியார்மய நடவடிக்கை ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய விண்வெளித்துறையில் தனியாருக்கு வாய்ப்பளிக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.முழுமையாக ராக்கெட் வடிவமைப்பு மற்றும் செயற்கைகோள்கள் வடிவமைப்பு, ஏவுதல் உள்ளிட்ட பணிகளிலும் தனியாருக்கும் வாய்ப்பு அளிக்கும் பணியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறுகையில், இந்திய விண்வெளித்துறைக்கு தேவையான தளவாடங்களை மட்டுமே தனியார் தயாரித்து அளித்து வருகின்றனர். வரும் காலங்களில் விண்வெளி திட்டங்களிலும் தனியாருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகதற்போது மனித விண்வெளிப் பயணத் திட்டத்திலும் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்காக அவர்கள்குறித்த தகவல்களை முன்பதிவு செய்ய கடந்த மாதம் 31 ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருவதால் ஆகஸ்ட் 31 வரை மீண்டும் கால அவகாசம் வழங்கி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.