புதுதில்லி:
பாஜக தலைவர்கள் எல்.கே. அத் வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில், தீர்ப்பு வழங்குவது மீண்டும் ஒத்திப் போயிருக்கிறது.
இவ்வழக்கில் விசாரணையை நடத்திதீர்ப்பு வழங்குவதற்கான கால அவகாசம் ஏற்கெனவே 2 முறை நீட்டிக்கப்பட்டநிலையில், தற்போது மீண்டும் செப்டம்பர்30 வரை சிபிஐ நீதிமன்றத்துக்கு, உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமா பாரதி, உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங், வினய் கத்தியார், விஎச்பிதலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் உள்ளிட்ட 21 பேர் மீதான பாபர்மசூதி இடிப்பு வழக்கை, லக்னோ சிபிஐநீதி மன்றம் 2 ஆண்டுகளுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கியாக வேண்டும் என்று2017 ஏப்ரல் 19 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், குறித்தபடி 2 ஆண்டு காலத்துக்குள் விசாரணை முடிக்கப்படவில்லை. இதனால் 2020 ஏப்ரல் வரை சுமார் 9 மாதம்உச்சநீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்கியது. இந்த 9 மாத அவகாசத்திலும் விசாரணையை முடிக்காத லக்னோ சிபிஐ நீதிமன்றம் கொரோனாவைக் காரணம் காட்டி, மேலும் அவகாசம் கேட்டது.உச்சநீதிமன்றமும் 2020 ஆகஸ்ட் 31 வரைஅவகாசத்தை நீட்டித்து, கடந்த மே 8 அன்று அனுமதி வழங்கியது.இந்நிலையில், மூன்றாவது முறையாகவும், குறித்த அவகாசத்திற்குள் விசாரணையை முடிக்க முடியவில்லை என்றுசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கடிதம் எழுத- நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், நவீன் சின்ஹா, இந் திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வும் அதனை ஏற்று செப் டம்பர் 30 வரை மீண்டும் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.