சென்னை,அக்.22- 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதலாக அரை மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்.தற்போது பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு இரண்டரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணி நேரம் அதிகரித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப் படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு அறி வுறுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.