சந்திரயான் 3 ஜூலை 16 அன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. முன்னதாக, சனிக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், “சந்திரயான் 3-ன் முழு குழுவிற்கும் ஒரு கடினமான பயணம்; அவர்கள் மிகவும் கடுமையான, பாடங்களைக் கடந்து சென்றனர். எங்கள் மீது எந்த அழுத்தமும் இல்லை; ஏவும் பணிக்கு நாங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறோம்; ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய கவனம் செலுத்தியுள்ளோம் என்றார். இஸ்ரோ தலைவர் மேலும் கூறுகையில், ‘‘சந்திரயான்-2 மற்றும் -3 ஆகிய விண்கலங்களின் பணிகள் “ஒரே விதமானவைதான் என்றும், பிந்தையது சந்திரனில் மெதுவாக தரையிறங்க முயற்சிக்கும் என்றும், இம்முறை சோதனைகள் செய்யப்படுவதே எங்கள் குறிக்கோள். நீங்கள் நிதானமாக இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும். அதுதான் நோக்கம்” என்றும் கூறினார். சந்திரயான்-3 ஏவப்படுவதற்கு முன்னதாக, ஸ்ரீஹரிகோட்டாவின் தொலைத்தொடர்பு பிரிவு, சதீஷ் தவான் விண்வெளி மையத்தைச் சுற்றியுள்ள சாலைப் பணிகளை ஜூலை 9-14 வரை தடை செய்துள்ளது. “சாலை பழுது மற்றும் பிற தோண்டுதல் நடவடிக்கை களால் பிஎஸ்என்எல் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் சேதமடையாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரோவின் விண்வெளி மையத்தை இணைக்கும் அனைத்து முக்கிய தகவல் தொடர்பு இணைப்புகளும் பிஎஸ்என்ல் நிறுவத்தால் பராமரிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக செல்கின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக்கிழமை சந்திரயான் -3 இன் ஏவுகணை வாகனமான எல்விஎம் 3-எம் 4 ஐ ஏவுதளத்திற்கு நகர்த்தியது. இந்தியாவின் மூன்றாவது சந்திரப் பயணமான சந்திரயான்-3, ஜூலை 14ஆம் தேதி மதியம் 2:35 மணிக்கு புறப்பட உள்ளது. 2019 ஆம் ஆண்டில், சந்திரயான்-2 மிஷனின் விக்ரம் சந்திர லேண்டர் நிலவில் விழுந்தது.