இரு செயற்கைக்கோள்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை 15 மீட்டரில் இருந்து 3 மீட்டருக்கு குறைத்து சோதனை நடத்தியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோளை இணைக்கும் 'டாக்கிங்' சோதனையை வெற்றிக்கரமாக செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதற்கென ஸ்பேட்எக்ஸ் திட்டத்தின் கீழ், பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் மூலம் SDX01 (Chaser) மற்றும் SDX02 (Target) ஆகிய இரு செயற்கைக்கோள்கள் கடந்த டிசம்பர் 30-ஆம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில், இரு செயற்கைக்கோள்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை முதல் 230 மீட்டாக குறைக்கப்பட்டு, பின்னர் 15 மீட்டரும், படிப்படியாக 3 மீட்டருக்கு குறைத்து சோதனை நடத்தியதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
தீவிர ஆய்வுக்கு பிறகு இரண்டையும் இணைக்கும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளது.