science

img

‘அபோபிஸ்' சிறுகோளை தீவிரமாக கண்காணிக்கும் இஸ்ரோ!

‘அபோபிஸ்' எனும் சிறுகோள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருக்கிறது. 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பூமிக்கு மிக அருகில் வரலாம் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு அபோபிஸ் எனும் சிறுகோள்  கண்டுபிடிக்கப்பட்டது. தோராயமாக 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோள் பார்க்க வேர்க்கடலை வடிவில் இருக்கும். தற்போது அது மிகவும் நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது, 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று பூமிக்கு மிக அருகில் வரலாம் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சிறுகோளை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த சிறுகோள் 2029 இல் பூமியில் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் இஸ்ரோ உட்பட உலக நாடுகள் இதை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.