சென்னை, மே 6- தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா முதல் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் வரை வளிமண்டல மேல டுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.