science

img

சிம்லா அருகே பல மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரப் படிமங்கள் கண்டுபிடிப்பு!

சிம்லா அருகே பல மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த, மெசோசோயிக் சகாப்தத்தின் புவியியல் கால மரப் படிமங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சிம்லா அருகே உள்ள கராபதர் பகுதியில், இந்த 2.1 பில்லியன் பழமை வாய்ந்த மரப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநில அருங்காட்சியக பொறுப்பாளர் ஹரிஷ் சவுகான் கூறுகையில், கராபதர் பகுதியில், மெசோசோயின் சகாப்தத்தின் புவியியல் கால (67-250 மில்லியன் ஆண்டுக்கு முன்பு) மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல் பிரதேசத்தின் கலை மற்றும் பண்பாடுத் துறை இந்த மரப் படிமங்களை பாதுகாக்க திட்டமிட்டுள்ளது. இது போன்று, பல மரப் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதைப் படிமங்கள் இருக்கும் இடங்களில் வேலி அமைத்து, மேலும் அதனை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த பிப்ரவரி மாதத்தில், சர்வதேச விஞ்ஞானிகள் குழு, கபோனில் உள்ள பாறைகளில், உலகின் முதல் உயிரினங்களின் தொன்மையான புதைப் படிவங்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சுமார் 2.1 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த புதைப் படிமங்கள் ஆகும். இது பல ஒற்றை செல்கள் ஒன்றிணைந்து நத்தை போன்ற பலவகை செல்களை கொண்ட உயிரினங்கள் உருவாகியதும், இந்த உயிரினங்கள், தனக்கு மிகவும் சாதகமான சூழலைத் தேடி மண்ணுக்குள் ஊர்ந்து சென்று வாழ்ந்து இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.