ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்ய நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆரா ய்ச்சிக் கவுன்சில் ( ஐ.சி.எம்.ஆர்) அறி வுறுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்று இருப் பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப் பட்டன. சீனாவில் உள்ள அமெரிக்க நிறு வனங்கள் மற்றும் பல நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள் முதல் செய்யப்பட்டன. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து கொரோனாவை கண்டறிய ரேபிட் கிட்டுகளை பயன் படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்தது.
ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத் தினை பரிசோதித்து வருகிறோம், மீண் டும் இந்த கருவிகளை கொண்டு சோத னையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது. இதன்படி, கொரோனா தொற்றை உறுதி செய்ய நாடு முழுவதும் பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநிலங்க ளுக்கும் ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது.