science

img

கடலிலிருந்து கார்பனை எடுக்கும்  'நேனோ ஜார்' தொழில்நுட்பம் !

காற்றில் சேரும் கார்பன்டைஆக்ஸைடு , காற்றுமாசுவை ஏற்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது . பின்னர் , கார்பன் மாசுவானது படிப்படியாகக் கடலின் மேற்பரப்பில் இறங்கி கடல் நீரை அதிக அமிலத் தன்மை கொண்டதாக மாற்றுகிறது . இதற்காகப் பல வழிகள் கொண்டு , காற்றிலிருந்து நேரடியாகவே கார்பன்டைஆக்ஸைடை பிரித்து எடுத்து , அவற்றை வேறு வழிகளில் பயன்படுத்திக்கொள்வது போன்ற செயல் நடைமுறையில் உள்ளது .

ஆனால், கடல் நீரில் கரைந்துவிட்ட கார்பன் டை ஆக்சைடு, கடல் வாழ் உயிரினங்களை மெல்லக் கொல்வதோடு, மீண்டும் கடல் நீர் காற்றில் ஆவியாகக் கலந்துவிடுகிறது . இதனால் , பல வேதி மாசுகளை அது காற்றில் சேர்க்க நேரிடுகிறது. எனவே , நீரில் கலந்த கார்பன் மாசினை எடுக்க, 'நேனோ ஜார்' தொழில்நுட்பம் என்ற ஒன்றை அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின்  வேதியியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த 'நேனோ ஜார்' என்பது ஒரு கரிம திரவம் . இது தாமிர(காப்பர்) அயனி போன்ற சில வேதிப் பொருட்கள் கலந்த திரவம் . இதைக் கடல் நீரில் கலந்தால் , கார்பனேட், குரோமேட், ஆர்சனேட், பாஸ்பேட் உள்ளிட்ட பல மாசுகளின் அயனிகளுடன் ஊடுருவி அவற்றைச் செயலிழக்கச் செய்துவிடும். பிறகு, இந்த மாசுகள் அனைத்தும் கடலின் மேற்பரப்பில் மிதக்கும். அதை எடுத்து, மேலும் பதப்படுத்தினால் வேறு பயனுள்ள பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று இது குறித்து ஆய்வு செய்த அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின்  வேதியியாளர்கள் தெரிவித்துள்ளனர் .