டோபமின்(Dopamine) என்பது நமது நரம்பு மண்டலத்தில் காணப்படும் சமிஞ்கை கடத்தும் வேதிப்பொருளாகும். இதுவும் செரடோனின், ஆக்சிடாக்சின் மற்றும் எண்டார்ஃபின் ஆகியவையும் மகிழ்ச்சி தொடர்பான ஹார்மோன்கள் எனப்படுகின்றன. இவற்றின் பாதைகள், வினைகள் ஆகியவை குறித்து அறிவியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவற்றில் டோபமின் ‘இயக்கம், நினைவு மற்றும் உந்துசக்தி’ ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏதாவது விருது ஒன்று பெறுவதற்கு முதல் நாள் அல்லது தேர்வில் வெற்றி பெற்ற மறு நாள் ஒருவருக்கு ஏற்படும் உற்சாக உணர்விற்கு இந்த ஹார்மோனே காரணமாம். எதுவுமே அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சினைதான். அதன்படி டூரெட் கோளாறு(tourette syndrome) உள்ளவர்களின் மூளையில் இது அதிகமாக காணப்படுகிறது. இந்தக் கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி கண் சிமிட்டுதல், தோள்பட்டை உயர்த்துதல் அல்லது டிக் டிக் என்பது போல ஒலிகளை எழுப்புதல் ஆகிய செய்கைகளை அனிச்சையாக செய்வார்கள். ஆனால் பார்கின்சன் வியாதி உள்ளவர்களிடம் இது குறைவாக காணப்படுகிறது.
வாழ்க்கை முறையும் டோபமினும்
ஆனால் ஆய்வாளர்களை கவலைக்குள்ளாக் கும் விசயம் என்னவென்றால் தற்போதுள்ள வாழ்க்கை முறை இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும் விதமாக அமைந்திருப்பதே. எடுத்துக்காட்டாக 24 மணிநேரமும் பொருட்களை வீட்டிலேயே கொண்டு வந்து தரும் ஆன் லைன் ஷாப்பிங் முறையினால் நமது எதிர்பார்ப்பு உணர்வு அதிகமாகி டோபமின் அதிகம் சுரக்கலாம். இதனால் இந்த நடவடிக்கை யில் மீண்டும் மீண்டும் ஈடுபட தூண்டப்படுவோம். பல தலைமுறைகளாக மக்கள் மது, போதைப் பொருட்கள் ஆகியவற்றிற்கு அடிமையாவதும் இந்தக் காரணத்தினால்தான். இப்போது பெரும்பா லோர் கைபேசிக்கு அடிமையாகியுள்ளார்கள். அறி விப்புகள், குறும் செய்திகள், இடைவிடாது வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டேயிருப்பது ஆகியவை எதிர் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இது டோப மின் சுரப்பதில் முக்கியமானதாகும்.
டோபமினை வணிகமயமாக்கும் போக்கு
அறிவியல்துறை அல்லாமல் இன்னொரு துறை யில் இதைப் பயன்படுத்தி விற்பனையை அதிகப் படுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. அது ஆடை வடிவமைப்பு துறைதான். உலகமே நோயுடன் போராடிய கோவிட் தொற்றுக் காலத்திற்குப் பிறகு உணர்வுகளை உற்சாகமூட்டுகிறோம் என்கிற பெய ரில் அதீத வண்ணங்கள், புதிய வகைமாதிரிகள் மற்றும் துணிகளின் நயம் ஆகியவற்றில் கட்டுப் பாடற்ற விதத்தில் தாறுமாறான வகைகள் குவிக்கப்பட்டன. ‘டோபமின் ஆடைகள்’ என்ற சொல்லாடலே உருவாக்கப்பட்டது. சுவர்களுக்கு வெள்ளை அல்லது கிரீம் வண்ணம் அடிப்ப தெல்லாம் தூக்கியடிக்கப்பட்டு தடித்த கோடுகள், புள்ளிகள், இலை மாதிரிகள் இவை எல்லாம் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுடன் ஒன்று கலந்தோ அறை அலங்காரங்கள் செய்யப்பட்டன அல்லது பன்னாட்டு இதழ்களில் புகைப்படங்களாக வெளியிடப்பட்டன. வடிவமைப்பாளர்கள் டோப மினை மகிழ்ச்சியளிக்கும் பொருள் என்று புரிந்து கொண்டார்கள். அது உண்மையல்ல. ‘எதிர் காலத்தில் கிடைக்கும் வெகுமதியை’’ அதிகப் படுத்துவதுவே அதன் பயன்பாடு ஆகும். இந்த சந்தர்ப்பத்தை முதலீட்டளர்கள் விடு வார்களா? 10 லட்சம் டாலர் முதலீட்டில் செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் டோபமின்.ஃபிட் எனும் இணயதளத்தையே ஏற்படுத்த உள்ளார்கள். ‘உடை மற்ற பிற நாகரீகங்களின் பின்னால் சந்தைப் பொருளாதாரம் உள்ளது’ என்கிறார் நரம்பி யல் உளவியல் மருத்துவர் எண்ணபாடம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி. பழக்கத்திற்கு அடிமையாகும் விதத்தில் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றே வடிவ மைத்ததற்காக மெட்டா நிறுவனத்தின் மீது பல அமெரிக்க மாநிலங்கள் வழக்கு தொடுத்துள்ளன. மது, போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீள்வதற்கு அவற்றை பயன்படுத்தாமல் வாழலாம். ஆனால் நவீன தொழில்நுட்பமான கைபேசி விளை யாட்டுகள், டெக்ஸ்ட் பண்ணிக்கொண்டே இருப்பது போன்றவற்றிலிருந்து மீள்வது அவ்வளவு எளி தல்ல.
ஆரோக்கிய துறையும் விட்டுவைக்கவில்லை
இவற்றை தூண்டும் டோபமின் அதிக அளவில் செயல்படாமல் செய்வதற்கு, அவற்றை தீண்டாமல் விரதம் இருப்பது (digital fasting) என்கிற ஒன்று பரிந்துரைக்கப்படுகிறது. இதை ‘டோபமின் நச்சு நீக்கம்’ (dopamin detax) என்று அழைக்கிறார்கள். நிஜ வாழ்க்கையில் உடனடியான பாராட்டுகள் கிடைப்பதில்லை. குடும்ப உறவுகள் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் அங்கீகாரங்களும் சிதைவுறுகின்றன. ஆனால் கைபேசி போன்ற எண் ணியல் ஊடகங்களில் உடனடியாக பின்னூட்டம் கிடைக்கிறது. ஆகவே கைபேசி/கணினி திரைகள் மூளையை தூண்டி, இப்படிப்பட்ட உடனடிப் பலன்களுக்கு ஆளாகும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளுகின்றன.
உண்மையான டோபமின்?
அமெரிக்க வாழ்க்கை முறை வழிகாட்டி நிறு வனம் ஒன்று தனது இலட்சக்கணக்கான பயனா ளர்களுக்கு “உண்மையான டோபமினை தேடுங்கள். சூரியன், பனி, வெப்ப நீரூற்று, பளு தூக்குதல், ஓட்டம், நடை ஆகியவையே நிஜ தூண்டுதல்கள். உடனடியாக கைக்கெட்டும் போலி டோபமின்கள் கொண்டு உங்கள் முழு திறனை அடைய இயலாது” என்று ஒரு செய்தியை அனுப்பி யது. போலி டோபமின் என்று அது குறிப்பிடுவது, சில பழக்கங்கள் மற்றும் போதை மருந்துகளுக்கு அடிமையாகும்போது சுரக்கும் வேதிப் பொரு ளையே. கர்நாடகாவில் ஒரு நிறுவனம் தன்னுடய பொருளை உடனடியாக வாங்க வைக்க என்றே ஒரு விளம்பர எழுத்தாளரை நியமித்திருந்தது. நுகர்வோரின் ஆழ்மனத்தில் வாங்கும் ஆசையை தூண்டுவதே அவரது பணி.
உடல் இயக்கத்தில் டோபமினின் பங்கு
மற்ற மூலக்கூறுகள் போலவே டோபமினும் நம் உடலில் தனித்து இயங்குவதில்லை. மேலும் மூளை யின் பல இயக்கங்கள் இன்னும் விளங்கிக் கொள்ளப்படவில்லை. வயதாகும்போது டோபமின் சுரப்பது குறையும் என்று அறியப்பட்டுள்ளது. மதுப்பழக்கதிற்கு அடிமையாதல் போன்ற மரபாக வரும் சில கோளாறுகள் போல திடீர் முடிவுகளெ டுத்தல், தன்னைத்தானே அழித்துக் கொள்தல் போன்றவைகளுடனும் டோபமின் தொடர்புடையது. கடந்த வருடம் ரூர்க்கியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் நரம்பு மண்டல நோய்களான ஆளுமைச் சிதைவு, பார்கின்சன் கோளாறு ஆகிய வற்றை அறிவதற்காக டோபமின் உணர்வி ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது எதிர்காலத்தில் நோயா ளிகளை பராமரிப்பதில் உதவலாம். நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் செரிமான மண்டலம் ஆகிய உறுப்புகளை கட்டுப்படுத்துவதில் டோபமினின் பங்கு குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறதாம். ஒரு சிக்கலான சூழலை எதிர்கொள்தல் அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்தல் அல்லது விளை யாடும்போது ஏற்படும் வேக உணர்வு ஆகிய வற்றைக் கட்டுப்படுத்தும் அட்ரீனலினும் டோபமின் உற்பத்தி செய்யும் பொருளே. டோபமின் அளவுகளை கட்டுக்குள் வைப்பதற்கு உணவும் ஒரு வழி என்கிறார் டெல்லியை சேர்ந்த உண வியலாளர் மஞ்சேரி சந்திரா. சைவ உண்வாளர்கள் போதுமான அளவு கொட்டைகள், விதைகள், பருப்பு, தயிர், நல்ல பாலாடைக் கட்டி, ஆகியவற்றையும் அசைவ உணவாளர்கள் கொழுப்பு நிறைந்த மீன், கோழி ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டு மாம். நமது குடலில் வாழும் நுண்ணுயிரிகள் நமது நரம்பு மண்டலத்தையும் கட்டுப்படுத்துகின்றன. நல்ல உணவை உண்ணும்போதும் நல்ல காற்றை சுவாசிக்கும்போதும் நன்மை செய்யும் நுண்ணு யிரிகள் அதிகமாகின்றன. ஆகவே டோபமினின் தூண்டுதல் இருந்தாலும் ஆரோக்கியமான உணவு, ஓய்வு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றை நமது உட லுக்கு அளித்தால் அது ஒரு சம நிலையை நோக்கி திரும்பும்.
(26.11.23 இந்து நாளிதழின்
சுனாலினி மேத்யூ அவர்களின்
கட்டுரையிலிருந்து)