science

img

அறிவியல் கதிர் - ரமணன்

வீனசில் எரிமலைக் குழம்பு?

வீனஸ் (வெள்ளி) விண்கோள் ஏறத்தாழ பூமியை ஒத்த அளவிலானது. நீண்ட கால மாக அது புவியியல் ரீதியாக உயிரில்லாததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால தரவுகள் அதன் பரப்பில் 1990-1992 இடையே புதிய எரிமலைக் குழம்பு  ஓடியதை காட்டுகிறது. நாசாவின் மெகல்லன் விண்கலத்தின் ரேடார்கள் படம் பிடித்த  காட்சியில் அதன் பரப்பில் நீண்ட துளைகள் தோன்றுவது தெரிந்தது. தட்டையான நிலப்பரப்பில் இவை தோன்றியிருப்பதால் அது நிலச்சரிவு அல்ல என்றும் எரிமலைக்  குழம்பே என்றும் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.  இந்த தரவுகளின் குறைவான தெளிவாக்கம் மற்றும் வீனசின் பெரும் நிலப்பரப்பு  போன்ற காரணங்களினால் கிடைத்துள்ள எரிமலை இயக்கத்தின் சில அடையா ளங்களை வெளிக்கொண்டு வருவதற்கு பெரும் முயற்சிகள் எடுக்க வேண்டிவந்த தாம். பெரும் திரளான ஆய்வாளர்கள் அல்லும் பகலும் மொத்த நிலப்பரப்பையும் ஆய்வு  செய்தால் இன்னும் பல தடயங்கள் கிடைக்கும் என்கிறார் செயின்ட் லூயிசிலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கோள் அறிவியலாளர் பால் பைரன். அவர்  மேலும் கூறுகிறார் ‘பூமியைப் போன்றே வீனசிலும் எரிமலை இயக்கங்கள் இருக்கும்;  அடுத்த பத்தாண்டுகளில் ஏவப்படும் நாசாவின் விண்கலங்கள் இதைவிட அதிக விவ ரங்களை அளிக்கும். அதன் மூலம் எரிமலை தடயங்களை எளிதாகக் காணலாம் ‘  இந்த ஆய்வு மே 27ஆம் தேதியிட்ட ‘நேச்சர் அஸ்ட்ரானமி’’(nature astronomy)  இதழில் வந்துள்ளது.

சீனாவின் சாதனை 

பூமிக்கு அப்பக்கமாக உள்ள நிலவின் இருண்ட பகுதியில் சீனா  வெற்றிகரமாக சாங்க்-6 எனும் ஆய்வுக் கலத்தை இறக்கி யுள்ளது. இந்த சாதனையை செய்த முதல் நாடு என்ற பெருமை யைப் பெற்றுள்ளது. நிலவின் அந்தப் பகுதியில் ஒரு கலத்தை இறக்குவது மிகவும் கடினம் என்கிறார் சீனாவுடன் பணிபுரியும் ஐரோப்பிய விண்வெளி முகமையை சேர்ந்த நெயில் மெல்வில்-  கென்னடி. அது மிகவும் ஆழமான இருண்ட பள்ளங்களையும் நீண்ட நிழல்களையும் கொண்டதாக இருப்பதால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாது. பல இணைப்புகள் மூலமே ஆணை களை அனுப்ப இயலும்.  சாங்க்-6 லேண்டர் 2கிலோ எடையுள்ள மாதிரிகளை சேகரித்து  அதன் மேலுள்ள ராக்கெட் பூஸ்ட்டருக்கு அனுப்பும். அது மீண்டும்  விண்வெளிக்கு திரும்பி இன்னொரு விண்கலத்துடன் இணைந்து  ஜூன் 25 அன்று பூமிக்கு திரும்பி வரும். இதை ஆய்வு செய்வதன்  மூலம் சூரிய மண்டலம் உருவானது குறித்த தடயங்கள் கிடைக்கும்.  நிலவின் ஆராயப்படாத இருண்ட பக்கத்தை அதிகம் அறியப் பட்ட பூமியை நோக்கியிருக்கும் பக்கத்துடன் ஒப்பிட இயலும்.  உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா நிலவின் கனிம வளங்களை ஆராய்வதற்காக நிலவும் போட்டியில் சீனாவின் இந்த வெற்றி அதன் விண்வெளி அந்தஸ்தை உயர்த்தும்.

சர்க்கஸ் மரணக் கிணறும் நிலவில் நடப்பதுவும்

எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேறலாம். அப்போது அவர்கள் உடல் இயக்கத்தில் என்னென்ன பிரச்சனை கள் வரும்? ஒரு பிரச்சனை நிலவில் புவி  ஈர்ப்பு விசை பூமியில் இருப்பது போல் 1/6 பங்கே இருக்கிறது. இதனால் தசைகள் இறுகி எலும்புகள் மிருதுவாகிவிடும். இதை தடுக்க உடற்பயிற்சி செய்யலாம். புவி ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் எவ்வாறு செய்வது என்பதற்கு இத்தாலி நாட்டின் மிலான் பல்கலைக் கழகத்தை சேர்ந்த உடலியக்க அறிவியலாளர் ஆல்பெர்டோ மினெட்டி ஒரு சோதனை நடத்தினார்.  சர்க்கசில் மரணக்கிணறில் மோட்டர்  சைக்கிள் ஒட்டுவார்கள். அதைப் போல ஒரு  பெரும் மர உருளையில் மேலிருந்து தொங்  கும் கம்பிகளால் இணைக்கப்பட்டு இருவர்  பூமிக்கு கிடையாக ஓடினர். மேலிருந்து இணைக்கப்படும் கம்பிகளால் பயிற்சி யாளர்களின் எடை கிட்டத்தட்ட நிலவில் உள்ள ஈர்ப்பு விசைக்கு ஒத்தாக இருந்தது.  சுற்றி ஓடும்போது மய்யத்தை நோக்கி  இழுக்கும் சென்ட்ரிஃபியுகல் (centrifugal)  விசை உண்டாகிறது. இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு நெருக்கமாக இருக்கும். இதில் ஈடுபட்ட பாவெல் எனும் பயிற்சியாளர் முதலில் சுவருக்கு செங்குத்தாக ஓட முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. பிறகு சர்க்கஸ் வீரர்கள் செய்வதுபோல கீழிருக்கும் ஒரு மேடையிலிருந்து ஒரு  கோணத்தில் ஏறி வளைந்து வளைந்து  ஓடத் தொடங்கினார். ஆச்சரியப்படும் வித மாக அவர் பூமிக்கு கிடைமட்டத்தில் உரு ளையின் சுவற்றில் ஓடிக்கொண்டிருந்தார்.  அவர்கள் ஓடிய வேகத்தை கணக்கிட்டு அதில் எவ்வளவு சக்தி உருவானது என்ப தையும் மதிப்பிட்டார்கள். நிலவில் குடி யேறுபவர்கள் எட்டு அல்லது ஒன்பது சுற்று கள் ஓடினாலே எலும்புச் சிதைவை தடுக்க  முடியுமாம். பூமியில் மனிதர்கள் ஓய்வு  மற்றும் உடற்பயிற்சி எடுத்தற்கு பின்  எலும்பு அடர்த்தி கணக்கீடுகள் செய்யப் பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. நில வில் ஓடுபவர்கள் ஒரு மைலுக்கு 5 நிமிடம்  என்கிற வேகத்தில் ஓட வேண்டியதி ருக்கும். இது உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய வேகத்தில் பாதியே. சிறிது தூரம்தான் ஓடுவதால் இதை சாதிப்பது கடினமில்லை என்கிறார் பாவெல்.

 

;