விண்வெளியாளராவது என்பது எளிது என்று தோன்றலாம். வியக்கத்தக்க இரவு வானத்தை பார்க்கும் ஒரு குழந்தை பள்ளியில் விண்வெளியியல் படிக் கத் தூண்டும். பின் ஒரு பட்டம் பெறு வது; அந்த துறையில் பணிபுரிவது. ஆனால் பெண்களுக்கு இது அவ்வ ளவு எளிய நேர்கோட்டுப் பாதை அல்ல என்கின்றன இரண்டு புத்தகங் கள். அவை A Portrait of the Scientist as a Young Woman, The Sky Is for Everyone: Women Astronomers in Their Own Words என்கிற இரண்டு புத்தகங்கள். புவியியலாளராக இருந்து விண்வெளியியலாளராக மாறிய லிண்டி எல் கின்ஸ்டாண்டன் தான் எதிர்கொண்ட பால் வகைப்பட்ட (sexism) காழ்ப்புணர்ச்சியை கூறு கிறார். எரிமலை வெடிப்பிற்கும் உயி ரினங்கள் அழிந்துபட்டதற்கும் உள்ள தொடர்பை ஆய்வு செய்வதற்காக சைபீரியப் பகுதியில் பாறை மாதிரி களை சேகரிக்கும் போது அவர் உளி யை சரியான இடத்தில் பொருத்தும் போது அவரது ஆண் சகாக்கள் அவர் மெதுவாக வேலை செய்வ தைக் கண்டு பொறுமையின்றி தவிப் பதை தன்னால் உணர முடிந்தது என்கிறார். ஆண்கள் விரைவாகவும் சில அடிகளிலேயே பாறைகளை தகர்க்க முடியும். ஆனால் அது ஏன் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படு கிறது?அவரவர்கள் அவரவர் வேகத்திலும் பாணியிலும் செய்வது ஏன் முக்கியமாக எடுத்துக் கொள்ளப் படவில்லை என்கிறார் அவர்.
ஆண் சகாக்களின் மறைமுக மற்றும் நேரிடையான பெண் பாலி னர் மீதான காழ்ப்புணர்வு தனது தன்னம்பிக்கையை குலைத்தது. ஆண் அறிவியலாளர் போலவே தானும் மதிக்கப்பட வேண்டும் என்ப தற்காக தன்னுடைய சுமைகளை தானே தூக்கிச் செல்லவும் மாதிரி களை தானே சேகரிக்கவும் வலி யுறுத்தினார். இந்த அனுபவங்கள் அவர் அரிசோனா பல்கலைக் கழ கத்தின் புவியியல் பிரிவுத் தலைவ ரான போதும் நாசாவின் வருங்கால திட்டமான ‘psyche’ தலைவரான போதும் ஒரு பரிவான, நியாயமான தலைமையை அளிப்பதற்கு அவ ருக்கு உதவியது. ‘psyche’ திட்டம் பூமியின் இரும்பு மிகு அச்சை அறிந்து கொள்வதற்காக உலோக மிகு எரி கல் ஒன்றை ஆய்வு செய்யும் திட்ட மாகும். விண்வெளி இயற்பியலாளர் பிரான்ஸ் கொர்டோவாவின் குழந்தைப் பருவத்தில் பெண்கள் விஞ்ஞானிகளாகலாம் என்று யாரும் நம்பவில்லை. கல்லூரிப் படிப்பே தகுந்த கணவனை அடைவதற்கு என்று அவரின் பெற்றோர்கள் நம்பி னர். ஆனால் அவர் விண்வெளி இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தார். எக்ஸ்ரே விண்வெளி இயற்பியலில் பணியை தேர்வு செய்தார். பின் நாசாவின் தலைமை விஞ்ஞானியாகவும் தேசிய அறிவி யல் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தார். இந்தப் பணிகளின் போது அறிவியலில் பெண்கள் ஈடுபடு வதை வலியுறுத்த முடிந்தது என்கி றார்.
டாராநார்மன் தொலைதூர விண்மண்டலங்களை அளப்பதில் பாகுபாடுகள் அல்லது கோடல் (bias) என்கிற பிரிவில் முனைவர் பட்டம் பெற்றார். அறிவியல் தரவு களில் உள்ள பாகுபாட்டிற்கும் அறி வியல் பண்பாட்டில் காணப்படும் பாகுபாட்டிற்கும் உள்ள ஒற்றுமை கள் வெளிப்படை என்கிறார். அறி வியல் தரவுகள், முறைகள் ஆகிய வற்றில் காணப்படும் கோடலை நீக்கு வதற்கு அறிவியலாளர்கள் தொடர்ந்து பாடுபடுகிறார்கள். ஆனால் இந்தத் துறையில் காட்டப் படும் பாலியல், இன பாகுபாடுகள் என்று வரும் போது அப்படி ஒன்று இருப்பதாகவே ஒத்துக் கொள்வ தில்லை. விஞ்ஞானியாக முயற்சிக் கும் ஒரு கறுப்பின அமெரிக்கப் பெண்ணாக தான் அனுபவித்த கசப்பான அனுபவங்கள் ஆய்வு செய்வதில் உள்ள மகிழ்ச்சியை குலைத்து விடுகிறது. இவரும் இப்போது அறிவியலில் பண் பாட்டை உயர்த்துவதற்காக பாடுபடு கிறார்.