science

img

விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3

நிலவின் தென் துருவம் அருகில் தரையிறங்கி ஆய்வு செய்ய இஸ்ரோ அறிவியலாளர்கள் முழுக்க  முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 செயற்கைக்கோள் திட்டமிட்ட படி வெள்ளியன்று (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது. நிலவில் எப்படியாயினும் தடம் பதிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பலதும் முயற்சி செய்து கொண்டி ருக்கின்றன. அதில் மூன்று நாட்களில் வெற்றியும் பெற்றுள்ளன. தற்போது, தனியார் நிறுவனங்களும் இந்த போட்டியில் இறங்கியுள்ளன. அத்தகைய முயற்சிகளில், நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை முன்னெடுத்தனர்.

முதல் வெற்றி...

சந்திரயான் -1 திட்டம் அறிவிப்பு வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து (2008 ஆம் ஆண்டு) விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஆர்பிட்டரை மட்டுமே  அனுப்பி நிலவின் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவது தான் நமது விஞ்ஞானிகளின் முதல் திட்டமாக இருந்தது. ஆனால், அப்துல் கலாமின் ஆலோசனைப்படி மிகக் குறுகிய காலத்தில் மாற்றம் செய்து வடிவமைக்கப்பட்டது. அதன்படி, நிலவின் பரப்பை தொட்டி விட வேண்டும் என்று அதற்கான திட்டத்தை செயல்படுத்தினர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆர்பிட்டர் நிலவின் நீள் வட்டப் பாதையில் இருந்து சுமார் 70,000 புகைப்படங்களை அனுப்பி வைத்தது. அதில் எம்-3  என்கின்ற கருவி மூலம் கிடைத்த துகள்களில் இருந்து  நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மூலக்கூறுகளை கண்டறிந்து தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அடுத்த முயற்சியாக, 10 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டில் சந்திரயான் -2 நில வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆர்பிட்டர் வெற்றிகரமாக நீள் வட்டப் பாதையை அடைந்து சுற்றிக் கொண்டே இருந்தது. இப்போ தும் அது சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது.  ஆனால், விக்ரம் என்று அழைக்கப்பட்ட லேண்டரும் தரம் இறங்கி கலம், பிரக்யான் என்று அழைக்கப்பட்ட ரோவரும் நிலவின் தென்  துருவத்தில் தரை இறங்கி இருக்க வேண்டும். ஆனால், அது இறங்கும்போது ஏற்பட்ட சிறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சரிவர தரை இறங்கவில்லை. இது தோல்வி என்று சொல்வதை விட சிறிய பின்னடைவு என்று சொல்லலாம்.

விடாமுயற்சி..

அதன் படிப்பினைகளில் இருந்து கிடைத்த அனுபவங்களை கொண்டு, சந்திரயான் -3 திட்டத்தை வடிவமைத்தது இஸ்ரோ. இதற்காக செய்யப்பட்டது ரூ. 615 கோடி தான். இது குறைந்த செலவுதான். ஏனென்றால்? ஆனால் இதற்கு முன்பு அனுப்பிய சந்திரயான்-2 விண் கலத்திற்கு ரூ.978 கோடி செலவு செய்யப் பட்டது. சந்திரயான்-2 ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என்று மூன்று பிரிவுகள் இருந்தது.  தற்போது விண்ணுக்கு அனுப்பி இருக்கும் சந்தரியான் -3 விண்கலத்தில் லேண்டர், ரோவர் மட்டுமே அனுப்பியுள்ளது. காரணம்,  ஏற்கனவே அனுப்பிய ஆர்பிட்டர் நிலவின் நீள்வட்ட பாதையில் இப்போதும் சுற்றிக் கொண்டு இருக்கிறது.  தற்போது, சந்திரயான் மொத்தம் 3,895 கிலோ எடை கொண்ட எல்விஎம் -3 மார்க் 4 ஏவுகணை மூலம் 1,752 கிலோ எடை லேண்டருக்குள் 26 கிலோ எடை ரோவரையும் நிலவுக்குள் செல்கிறது. இந்த விண்கலத்தில் ஏழு விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பணிகள் 2019 ஆம் ஆண்டில் துவங்கி விரைவாகவே நிறைவடைந்தது. ஆனாலும், கொரோனா பெருந் தொற்று காரணமாக, ஓராண்டு காலம் தாமதமானது.

விண்ணில் பாய்ந்தது...

நமது விஞ்ஞானிகளின் விடாமுயற்சியால் வடிவமைக்கப்பட்ட ‘எல்விஎம்-3 எம்-4’ ராக்கெட்டில் சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் அனைத்து பாகங்களும் முழு மையாக பொருத்தி பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இருபத்தி ஐந்தரை (25.1/2) மணி நேர கவுண்டவுன் ஜூலை 13ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கியது.  எனவே, திட்டமிட்டபடி, ஜூலை 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துல்லியமாக பிற்பகல் 2.35 மணிக்கு சென்னை அருகே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

மகிழ்ச்சி வெள்ளம்...

பூமியிலிருந்து நிலவுக்கு செலுத்தும் வாகனம் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வை நேரில் பார்ப்பதற்காக பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தில்லி,மும்பை என்று வட மாநிலங்கள் இருந்து சதீஷ் தவான் வளாகத்தில் திரண்டிருந்தனர். அங்கு பிரயோக மாக அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் அரங்கம் முழுமையாக நிரம்பி வழிந்தது. அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட மாநிலங்கள் மட்டு மின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஊடகவியலா ளர்கள் ஏராளமாக குவிந்ததால் சதீஷ் தவானில் பத்திரிக்கையாளர் அரங்கம் முழுவது மாக நிரம்பியது. பூமியிலிருந்து தீ பிழம்புகளை கக்கியவாறு மேகத் திரையை கிழித்துக்கொண்டு விண்ணில் பாய்ந்த அற்புத நிகழ்வை வெயிலிலும் குடை யைப் பிடித்துக் கொண்டும் நீண்ட நேரம் காத்திருந்து மாணவர்களும் பார்வையாளர் களும்  பத்திரிகையாளர்களும்,நேரில் கண்டு பரவசமடைந்தனர். பூமியிலிருந்து சந்திரியான் விண்கலத்தை சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்த ராக்கெட்,  சரியான பாதையில் பயணித்து ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக முன்னேறியது. குறித்த நேரத்தைக் காட்டிலும் ஒரு நிமிடம் முன்னதாகவே விண்கலத்தை நிலை நிறுத்தி னர். நிலவை நோக்கிய இந்த பயணம் 42 நாட்கள் தொடரும் என்றாலும், பூமியிலிருந்து புறப்பட்டதில் கிடைத்த வெற்றியை விஞ்ஞா னிகள் இஸ்ரோ ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி ஆரவாரம் செய்தனர். 

தொடர் வெற்றி...

அப்போது உரையாற்றிய அறிவியலா ளர்கள், சந்திரயான் -3 திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் 73 நாட்களில் செய்து முடிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் நம்பகமானது என்பதை நிரூபித்து உள்ளோம்” என்றனர். நாட்டின் தேவை அதிகரித்து வருவதால் இனிமேல் இந்த தொழில்நுட்பத்தை அடிக்கடி பயன்படுத்துவோம் என்றும் கூறினர்.  ‘எல்விஎம்-3 எம்-4’ ராக்கெட்டில் தொடர்ந்து ஏழாவது வெற்றி கிடைத்திருக்கிறது இந்த ஆண்டில் மட்டும் இஸ்ரோ நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றிருக்கிறது.  அடுத்து வரும் காலங்களிலும் என்ஜின் களில் சில மாற்றங்களை அறிமுகம் செய்து மேலும் பல வெற்றிகளை பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத், சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி‌.வீர முத்து, உன்னி கிருஷ்ணன் நாயர், நாராயண், இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்ளிட்ட பங்கேற்ற னர்.

தமிழ்நாட்டிற்கு பெருமை!

இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றிலும் இடம் பிடித்திருக்கும் அறிவியலாளர் தமிழ் நாட்டைச் சார்ந்தவர் என்பது நாம் அனைவ ருக்கும் பெருமையாகும். அவர் யார்? செய்தது என்ன?என்பதை பார்ப்போம்:  விழுப்புரத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேலுவின் மகன் வீரமுத்துவேல். இவருக்கு விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயதிலேயே இருந்தது. தொழிற்கல்வி முடித்தவர். பிறகு, சென்னை ஐஐடியில் தொழிற்கல்வி, பொறியி யல், முதுநிலை ஆராய்ச்சியை முடித்தவர். 1989 ஆம் ஆண்டு இஸ்ரோவின் விஞ்ஞானி யாகும் வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைத் கட்டுப்படுத்தும் முறை குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். பெங்களூரு யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தொழில் நுட்பம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபல மாகப் பேசப்பட்டது.  ஏனெனில், நிலவில் லேண்டரை தரை இறக்கு வதற்கும் ரோவரை இயக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருந்தது. இதுவே அவரை 2019 ஆம் ஆண்டில் சந்திர யான்-3 திட்ட இயக்குநராகவும் மாற்றியது. அப்துல் கலாம், சிவன் நாயர்,மயில்சாமி அண்ணாதுரையை தொடர்ந்து வீரமுத்து இடம்பிடித்துள்ளார்.

நிலவில் மூவர்ணக் கொடி!

நிலவு என்பது அனைத்து நாடுகளுக்கும் இவ்வளவு முக்கியமானதாக இருப்பதன் காரணம், விண்வெளியில் ஏராளமான கிர கங்கள் உள்ளன. குறிப்பாக சூரியனும் உள்ளது. இருந்தாலும் அனைத்து நாடுகளும் நிலவுக்கு பின்னால் செல்வதற்கு முக்கிய கார ணமே, பூமியிலிருந்து சூரியன் 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அதே நேரத்தில், பூமியிலிருந்து நிலவு 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தூரத்தில் தான் உள்ளது. நிலவின் தூரம் குறைவாக இருப்பது விண்கலம் அனுப்பி ஆராய்வதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால்தான், உலகில் உள்ள நாடுகளில், எந்த நாடு நிலவுக்குச் சென்று தங்களது கொடியை நாட்டுகிறதோ அது அந்த நாட்டுக்கு பெருமை யாகும். அப்படி பார்க்கும் போது இத்தாலி, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட 11 நாடுகள் மட்டுமே நிலவுக்கு விண்கலம் அனுப்பும் முயற்சியை மேற்கொண்டன. ஆனாலும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் கொடியை நாட்டியிருக்கிறது. 1959 ஆம் ஆண்டு சோவி யத் ஒன்றியம்தான் முதன் முதலாக நிலவில் கடினமாக விண்கலத்தை தரையில் இறக்கியது.  அதனைத் தொடர்ந்து 1966 ஆம் ஆண்டில் தனது விண்கலத்தை மெதுவாகவும் தரையிறக்கி நிலை நிறுத்தியது. அந்த நாடு இதுவரையில் 23  விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இரண்டாவதாக அமெரிக்கா, 1969 ஆம் ஆண்டு அப்போலோ -11 விண்கலம் மூலம் மனிதர்கள் இருவரை நிலவுக்கு அனுப்பி வைத்தது. அடுத்தடுத்து தனது முயற்சியில் மொத்தமாக 12 பேரை அமெரிக்க நிலவுக்கு அனுப்பி வைத்தது. மூன்றாவதாக சீனா ஒரு விண்கலத்தை தரையிறக்கி உள்ளது. அது மட்டுமல்லாமல் 2035 ஆம் ஆண்டுக்குள் கூட்டு தாளம் ஒன்றையும் அமைக்க முடிவு செய்துள் ளது. இந்த மூன்று நாடுகளும் நிலவில் இறங்கி தடம் பதித்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவின் சந்திரயான் -3 வெற்றி பெற்றால் நான்காவது நாடு என்கிற பெருமை பெறும்.

அந்த 15 நிமிடங்கள்!

இந்தியாவின் மூன்றாவது நிலவு ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ அனுப்பும் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் பத்திரமாக தர இறங்க முக்கியமாக 10 கட்டங்களை கடக்க வேண்டி யுள்ளது. அதன் முதல் கட்டமாக பூமியிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் வெற்றிகரமாக ஜூலை 14 அன்று விண்கலம் நிலை நிறுத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து, பூமிக்கு அருகில் இருந்து உந்து சக்தி மூலம் 36,500 கிலோ மீட்டர் தூரத்தில் புவி நீள் வட்டப்பாதைக்கு கொண்டு சென்றனர். அடுத்த அடுத்த கட்டங்க ளாக, சுற்றுப்பாதையில் நிலவுக்கு செல்லும் ஆர்பிட்டர் வேகமும் உயரமும் படிப்படியாக அதிகரிக்கப்படும். இந்தப் பணிகள் அதிகபட்சம் 14 நாட்கள் நடக்கும். 62,630 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கும் நில வுக்கும் இடையிலான ஈர்ப்பு சக்தி சமமாக இருப்பதால் பூமியை நோக்கி ஒரு புள்ளியின் நேர்கோட்டில் விண்கலத்தை நிலை நிறுத்துகி றார்கள். அதன் தொடர் நிகழ்வாக விண்கலத்தின் பாதையை துல்லியமாக கணித்து கொண்டே செல்ல வேண்டும். இது அவ்வளவு எளிதான பணி அல்ல. ஆனாலும் இதையும் வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை புகுத்திள்ளனர்.

ஆறு கட்டங்களை தாண்டிய பிறகு, ஏழாவது கட்டமாக, விண்கலத்தை நிலவின் நீள் வட்ட சுற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, விண்கலத்தில் அனுப்பி வைத்துள்ள இரண்டு உந்து கலங்களான லேண்டர் (தரையிறங்கிக் கலம்), ரோவர் ஊர்தி கலங்களையும் தனித்தனியாக பிரித்து முதலில் வேகத்தை, 100 கிலோ மீட்டராக அதிகரிப்பார்கள். பிறகு அதை முப்பது கிலோ மீட்டராக குறைத்து நிலவின் நீள் வட்டப் பாதையில் அனுப்புகின்றனர். நிலவை நோக்கிய இந்த புதிய பயணம் ஏழுமலை கடலை கடந்து, 42 நாட்களுக்கு பிறகான, ஒன்பதாவது கட்டம் தான் மிக மிக முக்கியமானதாகும். இது மொத்தமே 15 நிமிட செயல்பாடு என்றாலும் இந்தியாவின் முழு வெற்றியும் இதில் தான் அடங்கி இருக்கிறது. இதில் சிறு தவறு நிகழ்ந்தாலும் பின்னடைவை சந்திக்க வேண்டியுள்ளது. அதனால்தான், இந்த முறை சிறு தவறு கூட நடக்காமல் மெது வாக லேண்டரை தரையிறக்கி புதிய சகாப்தம் படைக்கும் சாதனையை நெருங்கிவிட்டனர். இந்த சவாரியில் புதிய உச்சத்தை தொடுவ தற்கு இரவு-பகல் பாராமல் இஸ்ரோ அறிவிய லாளர்கள் மேற்கொண்டு வரும் பயணம் வெற்றி பெறும்.