science

img

நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்தது இஸ்ரோ!

நிலவில் கந்தகம் (Sulphur) இருப்பதை ஏற்கனவே ரோவர் கண்டறிந்த நிலையில், தற்போது Alpha Particle X-ray Spectroscope (APXS) கருவியின் பரிசோதனை மூலம் உறுதி செய்தது இஸ்ரோ.

நிலவின் மேற்பரப்பில் கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டில் இருந்து பிரிந்த ரோவர் நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. நிலவில் சிலிகான், இரும்பு, ஆக்ஸிஜன், அலுமினியம், கால்சியம், குரோமியம், டைட்டானியம், கந்தகம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவர் கண்டறிந்துள்ளது. தற்போது Alpha Particle X-ray Spectroscope (APXS) கருவியின் பரிசோதனை மூலம் நிலவில் கந்தகம் (Sulphur) இருப்பதை இஸ்ரோ உறுதி செய்ததுள்ளது. மேலும், நிலவின் மேற்பரப்பில் கந்தகம் எப்படி படிந்தது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நிலவில் பாதுகாப்பாக ரோவர் சுற்றி வரும் வீடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவர் சுற்றி வரும் இந்த காட்சிகளை விக்ரம் லேண்டர் படம்பிடித்துள்ளது.