சென்னை, ஆக.16- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதி விண்ணில் செலுத் தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நில வுக்கு மிக அருகில் சுற்றி வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து, தற்போது நான்கா வது முறையாக நிலவுக்கும் விண்கலத் திற்கு இடையேயான சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டுள்ளது என்று இஸ்ரோ அறிவித்திருக்கிறது. சந்திரயான்- 3 விண்கலம் ஆகஸ்ட் 1ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப் பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதை யில் பயணித்து வருகிறது. வரும் 23ஆம் தேதி மெதுவாக தரையிறங்க ‘சாஃப்ட் லேண்டிங்’ செய்யப்பட உள்ளது. அண்மையில், நிலவின் சுற்றுப் பாதைக்குள் சந்திரயான்-3 விண்கலம் நுழைந்து, பயணத்தைத் தொடங்கியது. படிப்படியாக சுற்றுப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பிரிந்துவிட்டால் திட்டமிட்டபடி, வரும் 23ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்கும்.