polling-station

img

அனைவருக்குமான வளர்ச்சிக்கு வெற்றிபெற்றே ஆக வேண்டும்

‘வளர்ச்சி என்றால், அனைவரும் வாழத்தக்க வளர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கான போராட்டமே இந்த தேர்தல். இதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’. இது எர்ணாகுளம் மக்களவை தொகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் குடைபிடித்துக் கொண்டு வரவேற்பளித்த பரவூர் பகுதி வாக்காளர்களிடம் அந்த தொகுதியின் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் பி.ராஜீவ் கூறிய வார்த்தைகள். பரவூர் பகுதியில் ராஜீவ் வாக்கு சேகரிக்கச் சென்றபோது 60 வயது செபாஸ்டின் சேட்டன் கூறினார், “நான் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டவன், ராஜீவ் எம்பியாக இருந்தபோது ஆலுவாயில் உருவாக்கப்பட்ட டயாலிசிஸ் மையத்தில் இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறேன். அப்படி ஒரு மையம் இருப்பதால் என்னைப் போன்றவர்கள் உயிர் வாழ்கிறோம்” என்றார். தனிப்பட்ட முறையில் ஒரு உதவி கிடைத்தால் கட்சியை மாற்றிக்கொள்வதா என்கிற கேள்விக்கும் செபாஸ்டின் பதிலளித்தார்: “ எத்தனை ஏழைகள் அந்த டயாலிஸிஸ் மையத்திற்கு வந்து உயிரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் வந்து பாருங்கள் நான் சொல்வது அப்போதுதான் உங்களுக்கு புரியும்”. தனது சிகிச்சைக்கு ஏராள மான உதவிகளைச் செய்தபோது ஒன்று மட்டும்தான் ராஜீவ் பார்த்தார். இலவசமாக அந்த சிகிச்சைகளை பெற தகுதியானவன்தானா என்பதே அது என்று நெகிழ்ச்சியோடு கூறினார் செபாஸ்டின் சேட்டன். அனைவருக்குமான வாய்ப்பின் பகுதியே அவரது வார்த்தைகள். 


-தேசாபிமானியிலிருந்து சி.முருகேசன்