புதுதில்லி:
நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, அரசு மதிப்பிட்ட 7 சதவிகிதத்தை விடக் குறைவாகவே இருக்கும் என்றுசிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் மேம்பாட்டுவங்கி (DBS) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2019 ஜூலை மாதத் தொடக்கத்தில், மத்திய அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2019-20நிதியாண்டில் இந்தியா 7 சதவிகித வளர்ச்சியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இவ்வாறு நடப்பாண்டில் 7 சதவிகித வளர்ச்சியை அடைய முடியும் என்று அரசுதரப்பு மதிப்பீடுகள் கூறும் நிலையில்தான், 2018-19 நிதியாண்டைப் போலவே, 2019-20நிதியாண்டிலும் 6.8 சதவிகித பொருளாதார வளர்ச்சி மட்டுமே சாத்தியம் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி(DBS) தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.கிராமப்புறங்களில் குறைவான ஊதியம்,நுகர்வில் குறைபாடு, போதிய மழையின்மை; வறட்சி போன்ற காரணங்களால் வேளாண் துறையில் வளர்ச்சி இருக்காது எனவும், இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் சிங்கப்பூர் மேம்பாட்டு வங்கி எச்சரித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் உலக வங்கி வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 2019-20ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.