politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- இரட்டைத் தலைமைக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு.
ச.சா - பாஜக சொல்றதக் கேக்குற நிலைமையச் சொல்றாங்களோ..??
*****
செய்தி :- பல்வேறு வழிகளில் நிதி திரட்ட சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முடிவு.
ச.சா - தனியார் மயத்த நோக்கி போகச் சொல்லி அரசு கட்டாயப்படுத்துதோ..??
*****
அதிமுக தலைமை :- ராணுவக் கட்டுப்பாடு கொண்டது அதிமுக.
ச.சா - பிரச்சனை ராணுவத் தளபதி யாருங்குறதுதானோ..??
*****
ஐக்கிய ஜனதா தளம் :- கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்.
ச.சா - ஆனா எதிர்த்துப் போட்டியிடப் போறாங்களாம்..!!!

;