politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி கேள்வி :- தேர்தலில் தோற்றதற்கு வாக்கு எந்திரங்களைக் குறை சொல்வதா?
ச.சா - வாக்கு எந்திரம் பத்தி விலாவாரியா பாஜக புத்தகமே வெளியிட்டுருக்கே..??
_ _ _

தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி:- தமிழகத்தில் செயற்கை மழை திட்டம் குறித்து ஆய்வு.
ச.சா - நல்ல விஷயம்தான்.. தெர்மகோல் மாதிரி ஆகாம பாத்துக்குவீங்களா..??
_ _ _

செய்தி :- உளவு அமைப்புகளுக்குப் புதிய தலைவர்கள்.
ச.சா - இந்த ஆட்சில இவங்க எவ்வளவு நாள் தாங்குவாங்களோ..??
_ _ _

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- ஏரி, குளங்களைத் தூர் வார தனியாருக்கு அனுமதி.
ச.சா - ஆக்கிரமிப்புக்கு வழி வகுக்காம இருக்கணுமே..??

;