politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

பிரதமர் மோடி :- நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் நானும், அமித்ஷாவும் நன்றி அறிவிப்பு கூட்டங்கள் போலவே பேசினோம் 

ச.சா - நன்றி எதுக்கு... அஞ்சு வருஷம் மக்கள் பொறுமையா இருந்ததுக்கா..?!?

*****

செய்தி :- பயங்கரவாத நடவடிக்கை வழக்கில் பாஜகவின் பிரக்யா வாரமொரு நீதிமன்றத்துக்கு வர உத்தரவு 

ச.சா - இந்த மாதிரி உத்தரவுலருந்து தப்பிக்கத்தான தேர்தல்ல நிக்குறாரு..!!?

*****

அதிகாரிகளுக்கு தமிழக தேர்தல் ஆணையம் அறிவுரை :- தேர்தல் முடிவுகளை

அவசரகதியில் அறிவிக்க வேண்டாம்.

ச.சா - உள்குத்து எதுவும் இல்லையே...!?

*****

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி :- என் அனுமதிக்கு கோப்புகள் வருவதில்லை.

ச.சா - வந்தாலும் அனுமதி குடுக்குற தில்லையாமே..?!?

;