politics

சந்தேகம் சாமிக்கண்ணு

பாஜக தலைவர் அமித்ஷா :- வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான சந்தேகத்துக்கு தோல்வி பயமே காரணம்.
ச.சா - அந்த சந்தேகத்த எல்லாம் முதல்ல கிளப்புனதே அத்வானிதானே..??
_ _ _
செய்தி :- ஆப்கன் தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ச.சா - அவங்களோட பேச்சுவார்த்தை வேற நடக்குதே..!!
_ _ _
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்:- தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருக்க புதிய வழிமுறைகள் தேவை.
ச.சா - இதுவரைக்கும் அதப்பத்தியே யோசிக்கலையா நீங்க..??
_ _ _
ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்:- ஜம்மு - காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வர வேண்டும்.
ச.சா - எதிர்க்கட்சித்தலைவர் மாதிரி பேசுறீங்களே..??

;