politics

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் :- அதிக முதலீட்டைக் கொண்டு வரவே முதல் அமைச்சர் வெளிநாடு பயணம்.
ச.சா - முதலீட்டாளர் மாநாட்டுல ஒண்ணும் கிடைக்கலையோ..??
 

பிரதமர் மோடி :- ஆரோக்கியமான இந்தியாவே எனது லட்சியம்.
ச.சா - போற போக்கப் பாத்தா அப்புடி தெரியலையே..??
 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும்.
ச.சா - ரெண்டு வருஷமா கேட்டு இப்போ வாங்குற ரிசர்வ் வங்கி பணத்தையே என்ன பண்றதுனு தெரியாத நிதியமைச்சர்..!!

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி:- இரும்பு மனிதர் அமித்ஷா.
ச.சா - பின்ன.. வலுவா அம்பானி பக்கம் நிக்குறாருல்ல..!!

;