பாட்னா:
மத்திய பாஜக அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் எதைச் செய்தாலும் ஆதரிப்பதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது. நாட்டில் தானாகவே ஒரு நல்லது நடந்தாலும், அது மோடியால்தான் நடந்தது என்று கூறும் இவர்கள், பிரதமர் மோடி உருவாக்கும் பேரழிவுகளை மட்டும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில்தான், நாட்டின் விவசாயத்தை அழிக்கும் வகையில் மோடி அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்கள் பற்றி வாய் திறக் காத அவர்கள், இந்த சட்டங்களை எதிர்த்துவிவசாயிகள் போராடியபோது மட்டும் வேகவேகமாக வந்து கருத்துக் கூறினர்.‘புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் போராட் டத்தை மோடி அரசு உணர்ச்சியற்ற வகையில் அணுகுகிறது’ என்று கிரேட்டா தன் பெர்க், ரிஹானா, மீனா ஹாரிஸ், மியா கலீபா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் விமர்சித்தபோது, ‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்... நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம்.. வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம்’ என்று சச்சின் டெண்டுல்கர் துவங்கி,ரோகித் சர்மா, விராட் கோலி, ரவி சாஸ்திரி,சாய்னா நேவால் போன்ற விளையாட்டுத்துறை பிரபலங்களும், பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர்கள் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், நடிகை கங்கனா ரணாவத் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் பாய்ந்து வந்தனர்.
ஆனால், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவை மிகக்கொடூரமாகத் தாக்கிவரும் நிலையில், படுக்கை வசதி, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசிக் கொள்முதல் என மோடி அரசு அனைத்து வகையிலும் மெத்தனம் காட்டியும் அதுபற்றி இவர்கள் இதுவரை வாய் திறப்பதாக இல்லை.இந்நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸிற்கான புதிய பிராண்ட் ஒப்பந்தத்தை டுவீட் செய்ததைப் பார்த்து ஆவேசமடைந்த பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி டுவிட்டர் பக்கத்தில் கடுமையான கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கோழைகளான இந்திய பிரபலங்களே, உங்களுக்கு முதுகெலும்புஇருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது காட்டுங்கள். உங்கள் தேவதூதர்களின் (பிரதமர் மோடி உள்ளிட்டோரின்) தவறான நடவடிக்கைகள் காரணமாகஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றாலும், ஒவ்வொரு நொடியும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள்மனசாட்சி எங்கே போனது? விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக அன்று அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலோ, பணத்திற்காகவோ போலிச் சீற்றத்தை வெளிப்படுத்திய பிரபலங்களே.. உங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த சீற்றம்இப்போது எங்கே? எல்லா இடங்களிலும், ஒவ்வொரு கணமும் இந்தியர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட், சினிமா உலகத்தைச் சேர்ந்த வெற்று பிரபலங்கள் கொஞ்சம்கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. தயவுசெய்து, நீங்கள் விசுவாசமாக இருங்கள்,அரசுக்கு அல்ல, மக்களுக்கு!’ என்று கூறியுள்ளார்.