politics

img

மோடி ஆட்சியில் மக்கள் நரகத்தை காண்கிறார்கள்... ராமர் பெயர் உச்சரிப்போருக்கு சாமானியர் கஷ்டம் புரியவில்லை.... சித்தராமையா கடும் சாடல்...

பெங்களூரு;
“ஸ்ரீராமரின் பெயரை உச்சரிக்கும் பாஜகவினருக்கு சாமானியரின் கஷ்டம் புரியவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்கள் நரகத்தைக் காண்கிறார்கள்” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா விமர்சித் துள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலைஉயர்வைக் கண்டித்து, பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, சித்தராமையா மேலும் பேசியிருப்பதாவது:கொரோனா ஊரடங்கால் ஏராளமான மக்கள் வேலைகளை இழந்து விட்டனர். உற்பத்தி நின்றுவிட்டது. ஆனால், மோடி அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்திவருகிறது. சிறிய அளவில் வாகனங்களை வைத்திருப்பவர்கள், பெட்ரோல் போட முடியாமல் தவிக்கின்றனர். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், அனைத்து அத்தியாவசியப் பொருட் களின் விலையும் உயர்ந்துவிட்டது. 

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடி போராட்டம் நடத்தினார். இப்போது அவர் பிரதமரானதும் தனது வாக்குறுதிகளை மறந்துவிட்டு பெட்ரோல் -டீசல் விலையை உயர்த்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சி விகிதம் குறைந்துவிட்டது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக பிரதமர் மோடி கூறினார். மாறாக இருக்கின்ற வேலைகள் பறிபோய்விட்டன. இதில் பாஜககவனம் செலுத்துவதாக இல்லை.மாறாக, மதவாதத்தை விதைப்பதே பாஜகவின் வேலையாக உள்ளது. மோடியின் ஆட்சியில்மக்கள் நரகத்தைக் காண்கிறார கள். ராமர் பெயரை உச்சரிக்கும் பாஜகவினருக்கு சாமானிய மக்களின் பிரச்சனைகள் புரிவது இல்லை.பிரதமர் மோடி, மக்களின் உணர் வுப்பூர்வமான விஷயங்களை பேசி அவர்களை ஏமாற்றுகிறார். இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.