tamilnadu

img

இந்தியை திணிப்பது கூட்டாட்சி முறைக்கு ஆபத்து: சித்தராமையா

பெங்களூரு:
இந்தி மொழி பேசாத மக்கள் மீது இந்தியை திணிப்பது கூட்டாட்சி முறைக்கு ஆபத்தானது என்று கர்நாடக முன்னாள் முதல்வர்சித்தராமையா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டுவிட்டர் பதிவில், கல்வியில் தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டுமே தவிர, திணிக்கப்படக் கூடாது. மற்ற மொழி திணிக்கப்படும் பொழுது குழந்தைகளின் படிப்பாற்றல் திறன் பாதிக்கப்படும்.

புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு இந்தி மொழி பேசாத மக்கள் மீது இந்தியைதிணிப்பது மிருகத்தனமான தாக்குதலைத் தவிர வேறொன்றுமில்லை. இது கூட்டாட்சி முறைக்கு ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார்.