politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்....

ஆர்எஸ்எஸ் கொள்கையை தொடர்ந்து எதிர்ப்பேன்...

“நான் ஒரு குறிப் பிட்ட சித்தாந்தத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். அதைத் தூக்கிப் பிடிக் கிறேன். அந்தக் கொள் கையை ஆதரிக்கும் போது என் பெயர் என்ன? எனது தாத்தா யார் என்றெல்லாம் நான் திரும்பிப் பார்க்கவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நான் தொடர்வேன். சிலருக்கு அதுபிடிக்கவில்லை என்பதால் அதை நான்கைவிட்டுவிட முடியாது. நான் தொடர்ந்துஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்துக் கொண்டேதான் இருப்பேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

                                ***************

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த பாஜக வேட்பாளர்

மேற்குவங்கத் தைச் சேர்ந்தவர் ஸ்வபன் தாஸ் குப்தா (65). பத்திரிகையாளரான இவர், கடந்த 2016 ஏப்ரல் 25 அன்று மாநிலங்களவை நியமனஎம்.பி. ஆக்கப்பட்டார்.அவரது பதவிக் காலம் வரும் 2022ஏப்ரல் வரை உள்ளது. இந்நிலையில், ஸ்வபன்தாஸ் குப்தாவை மேற்குவங் கத்தின் தாரகேஷ்வர் தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்தது.ஒரு நியமனஎம்.பி., பதவியேற்று 6 மாதத்துக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியில் இணைந் தாலும், கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டாலும் அவரின் பதவி செல்லாதது ஆகிவிடும் என்பதால், இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஸ்வபன் தாஸ் குப்தா, தனது எம்.பி. பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார்.

                                ***************

தடுப்பூசி போட்டும் குஜராத் அமைச்சருக்கு கொரோனா

முன்களப் பணியாளர்களைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய - மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குஜராத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் ஈஸ்வர்சிங் படேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னரும் ஈஸ்வர் சிங் படேலுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

                                ***************

கதையைத் திருடிய நடிகை கங்கனா ரணாவத்?

காஷ்மீரைச் சேர்ந்த போர் வீராங்கனை டிட்டாவைப் பற்றி, ஹிந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் எழுதிய கதையைத் திருடி சினிமா தயாரிக்க முயன்றதாக பாஜக ஆதரவுநடிகை கங்கனா ரணாவத் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட எழுத்தாளர் ஆஷிக் கவுல், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் எழுதிய டிட்டாகதையின் சில பகுதிகளை மின் அஞ்சலில் கங்கனாவுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அந்த கதையை எனக்குத் தெரியாமலேயே அவர் சினிமா
வாக எடுக்க முயல்கிறார் என்று கவுல் குற்றம் சாட்டியுள்ளார்.

                                ***************

இமாச்சல் பாஜக எம்.பி.தூக்குப் போட்டு தற்கொலை

இமாசல பிரதேசம், மாண்டி மக்களவைத் தொகுதி எம்.பி.யான ராம் ஸ்வரூப்சர்மா (62) அவரது வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி ராம் ஸ்வரூப் வேதனைப்பட்டு வந்ததாகவும், இந்நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் தற் கொலைதான் செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் மர்மம் உள் ளதா? என்று விசாரணை நடக்கிறது.