politics

img

தீக்கதிர் அரசியல் விரைவுச் செய்திகள்...

அசாம் எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பாஜக!

அசாமின் முக்கிய கட்சிகளில் ஒன்றான போடோலாந்து மக்கள் முன்னணி, அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. தற்போது பாஜக எம்எல்ஏக்களே பலர்அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். கடந்த வாரம் ‘திபு’ பழங்குடியினர்தொகுதி எம்எல்ஏவும் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சருமான சுங் ரோங்காங், பாஜக-விலிருந்து விலகிகாங்கிரசில் சேர்ந்த நிலையில், ஹோஜய்தொகுதி எம்எல்ஏ ஷிலாதித்யா தேவும் பாஜகவை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக, ஒருவழியாக சமாதானம் பேசி ஷிலாதித்யாவை மீண்டும் பாஜகவுக்கே இழுத்து வந் துள்ளது.

                                      *****************

நடிகை நக்மாவுக்கு காங்கிரசில் புதிய பதவி!

காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவுதுணைத் தலைவர் களில் ஒருவராக நடிகை நக்மாவை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது. முன் னாள் அமைச்சர் பாபா சித்திக் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மதுசவான் உள்பட 6 பேர் மூத்த துணைத்தலைவர்களாகவும், நடிகை நக்மா மொரார்ஜி மற்றும் முன்னாள் எம்எல்ஏயூசுப் அப்ரஹானி உள்பட 15 துணைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். முன்னாள் அமைச்சர் நசீம் கான் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

                                      *****************

பணக்காரர்களாகிக் கொண்டே இருக்கும் அரசு ஊழியர்கள் 

நாட்டில் விவசாயிகள் ஏழைகள் ஆகின்றனர். ஆனால் அரசு ஊழியர்களோ தொடர்ந்து பணபலம் பெற்று வருகின்றனர் என்று பாஜக முன்னாள் தலைவரும், தற்போதைய மேகாலய ஆளுநருமான சத்யமாலிக் பேசியுள்ளார். “விவசாயிகள் விதைப்பதுவிலை குறைவாகவும், நுகர்வது விலைஉயர்ந்ததாகவும் இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு எப்படி நடக்கிறது?” என்றுநியாயவான் போல கேள்வி எழுப்பியுள்ளமாலிக், “நாம் ஏன் ஏழ்மையில் இருக்கிறோம் என்பதை விவசாயிகளால் புரிந்து
கொள்ள முடியவில்லை” என்றும் போலிக் கண்ணீர் விடுத்துள்ளார்.

                                      *****************

ஆந்திர மாநகராட்சி தேர்தலில் பாஜகவுக்கு ஒரே ஒரு வார்டு!

ஆந்திராவில் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளில், வாக்குஎண்ணிக்கை நடைபெற்ற 11 மாநகராட்சிகளையும், 75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை யும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. 671மாநகராட்சி வார்டுகளில் 425 வார்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப் பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜேஎஸ்பி 7, சிபிஎம் 2, சிபிஐ 1 என வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. மத்திய ஆளும்கட்சியான பாஜக-வுக்கு ஒரே ஒரு வார்டுதான் கிடைத்துள்ளது.

                                      *****************

‘முகநூல், டுவிட்டர் நிர்வாகிகளை மிரட்டவில்லை’

‘சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் அரசையும், பிரதமரையும் அல்லது எந்தவொரு அச்சரையும் விமர்சிக்கலாம். விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் அரசு வரவேற்கிறது. மாறாக, எழுத்துப்பூர்வமாக அல்லது வாய்மொழியாக போடப்பட்ட அரசின்எந்தவொரு அறிவிப்பும் சமூக வலைத்தள நிர்வாகிகளை சிறைத் தண்டனையை காட்டி அச்சுறுத்தவில்லை’ என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.