மும்பை:
“அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவிடம் சிக்கியுள்ள நமது கட்சியினரைக் காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணிசேர்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று மகாராஷ்டிர முதல் வர் உத்தவ் தாக்கரேவுக்கு, சிவசேனா எம்எல்ஏ பிரதாப் சர்நாயக்கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:“கர்ணனைப் போல தியாகம்செய்யாமல் நாம் அர்ஜூனைப்போல யுத்தம் செய்தாக வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், கடந்த 7 மாதங்களாக அந்நிய செலாவணி மோசடி வழக்கை எதிர்கொண்டிருக்கிறேன். இதற்காக, சிவசேனா கட்சியிடம் இருந்தோ,அரசிடம் இருந்தோ எந்த உதவியையும் நான் கேட்கவில்லை. என்னைப் போலவே சிவசேனாதலைவர்கள் அனில் பராப்,ரவீந்திர வய்கார் ஆகியோரும்பிரச்சனைகளை எதிர்கொண்டுள் ளனர். எங்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் எனில் பிரதமர் மோடியுடன் சிவசேனா இணக்கமாகப் போக வேண்டும். இப் போதும் தாமதமாகிவிடவில்லை. முன்புபோல பாஜக-வுடன் நாம்கூட்டணி சேர்ந்தால் அனைவரையும் காப்பாற்ற முடியும்”.இவ்வாறு பிரதாப் சர்நாயக் கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிவசேனாகட்சியின் மூத்தத் தலைவர் சஞ் சய் ராவத், பிரதாப் சர்நாயக் எழுதிய கடிதம் உண்மையா என்பது தெரியவேண்டும். உண்மைதான் எனில் ஒன்றிய பாஜக அரசு எந்த அளவுக்கு எங்கள் எம்எல்ஏ-க்களை சித்ரவதை செய்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.