politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

இந்திய பொருளாதாரம் குறித்த நுகர்வோர் நம்பிக்கை குறியீடு கடும் வீழ்ச்சி:

நமது ஜி.டி.பி.வளர்ச்சியில் மக்களின் குடும்ப நுகர்வு என்பதுதான் 60 சதவீதம் பங்களிக்கின்றன. ஊதிய வருமானம் வீழ்ச்சியும் மிருகத்தனமான விலைவாசி உயர்வும் இரண்டு மிகப்பெரிய தாக்குதல்களாக முன்வந்ததில் மக்கள் வறுமையின் எல்லைக்கே தள்ளப்பட்டார்கள்.  மக்களின் வாழ்வையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க நேரடி நிதி உதவி/இலவச உணவு பொருட்கள் மிக மிக அவசியம்.

                              *****************

உலக அளவில் தொற்று எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது. அதிக அளவு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட தேசங்களில் உயிரிழப்பு மிகவும் குறைவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் பிரதமர் மோடி அவர்களே! 

  உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியை அதிகரியுங்கள்!

 உலகில் கிடைக்கும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள்.

 அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை வேகமாக செயல்படுத்துங்கள்.

                              *****************

சூழலியல் தாக்கத்தின் பாதகங்கள் நம்மை ஏற்கெனவே பாதிக்க ஆரம்பித்துவிட்டன. இந்திய பெருங்கடல் மிக அதிகமாக வெப்பமடை யும் கடலாக உருவாகியுள்ளது. அதீத மழை/ வெள்ளம்/நிலச்சரிவு/கடல் அரிப்பு என பல நிகழ்வுகள் கடுமையான இழப்புகளை உருவாக்கிக்ர்கொள்ள மோடி அரசாங்கம் தூக்கத்திலிருந்து விழிக்க வேண்டும்.

                              *****************

ஆய்வு: 66 சதவீதம் பேர் தமது ஊதியம் குறைந்துவிட்டது எனவும் 93 சதவீதம் பேர் விலைவாசி கடுமையாக உயர்வு எனவும் கருத்து. அதனை தரவுகள் நிரூபிக்கின்றன.வேலையின்மை/வருமான இழப்பு/உயரும் விலைவாசி கோடிக்கணக்கானோரின் வாழ்வுகளை சிதைத்துக் கொண்டுள்ளது. தேசத்துக்கு தேவையான கட்டமைப்புகளை உருவாக்க பொதுமுதலீடுகளை மிக அதிக அளவு அதிகரியுங்கள். அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள். இது பொருளாதார மீட்சிக்குவழிவகுக்கும். அதே சமயம் உடனடியாக நேரடி நிதி உதவியும் இலவச உணவு பொருட்களும் தாருங்கள்.

                              *****************

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறையை போக்க ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள மதிய உணவு திட்டத்துக்கு நிதி அமைச்சகம் அனுமதிமறுப்பு என கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவின் எதிர்காலத்தையே சிதைக்கும் ஆபத்து உருவாகியுள்ளது. 

 35.7 சதவீத குழந்தைகள் எடை குறைவு! 

 38.4 சதவீதம் உயரம் குறைவு!  

 21 சதவீதம்  முழுவதுமாக உடற்தகுதி இழப்பு!

பலர் உயிரிழப்பு! 

இந்த பிரச்சனையை தீர்க்க மதிய உணவு திட்டமும்

காலை உணவும் பள்ளிகளில் மிக அவசியம். இந்த திட்டத்தை மறுப்பதற்கு மோடி அரசாங்கத்தை அனுமதிக்கக் கூடாது.

                              *****************

கொல்கத்தாவில் மாணவர்களின் நன்மைக்காக இந்திய மாணவர் சங்கம் திறந்தவெளி வகுப்பு ஏற்பாடு செய்தது.நமது இளையதலைமுறையின் இத்தகைய அறிவு தாகம்தான் நமது தேசம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தியாவின் வலிமை! இதனை அழிப்பதற்கு மோடியை அனுமதிக்கக் கூடாது. அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துங்கள். கல்வி நிலையங்களை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யுங்கள்.

                              *****************

எனது பிறந்த நாளன்று நான் பெற்ற வாழ்த்துக்களும் அன்பும் ஒருமைப்பாடும் என்னை திக்குமுக்காட வைத்துள்ளது. என்னை வாழ்த்திய ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.